தன்வீட்டு மாடு பெண்கன்று
ஈன்றதுக்கு புல்லரித்துப் போனான்
மாட்டுக்கு புண்ணாக்கு, தவிடு
பொங்கல் வைத்துப் படைத்தான்
தன் குலச் சாமிக்கு
அவன் மனைவி பெற்ற பெண் குழந்தையை
சனியனே என ஏசினான்
தரித்திரம் பிடித்தவள் இந்தமுறையும்
செலவைப் பெற்றெடுத்தாளென
அவளுடைய புண் என்றாறும்
மனத்திலும் கத்திக் கிழித்த இடத்திலும்?
– சே.ராஜப்ரியன்