இன்டெக்ஸ் வார்த்தைகள்
திருநெல்வேலி அல்வா தாமிரபரணி: -d1 ,d100,d890
திருநெல்வேலி அல்வா: -d5,d450,500,600
திருநெல்வேலி தாமிரபரணி: -d100,d800,4500
திருநெல்வேலி: -d1,…d4000
அல்வா: -d6,…d6000
தாமிரபரணி: -d3,…d5000
வினா/க்வெரி
திருநெல்வேலி
வினா விரிவாக்கம்
திருநெல்வேலி அல்வா தாமிரபரணி
இப்பொழுது சர்ச்சிங் செயல்பாட்டில், வினா விரிவாக்கத்தில் கிடைத்த வார்த்தைகளை வைத்து இன்டெக்சில் அவ்வார்த்தைகள் இருக்கிறதா என தேடப்பபடுகிறது. நமது எடுத்துக்காட்டில், “திருநெல்வேலி அல்வா தாமிரபரணி” என மூன்று வார்த்தைகள் உள்ளன. இம்மூன்று வார்த்தைகள் ஒன்றாக சேர்ந்து காணப்படும் ஆவணங்கள், “திருநெல்வேலி அல்வா” ஆகிய வார்த்தைகள் மட்டும் சேர்ந்து காணப்படும் ஆவணங்கள், “திருநெல்வேலி தாமிரபரணி” ஆகிய வார்த்தைகள் மட்டும் காணப்படும் ஆவணங்கள், “திருநெல்வேலி” மட்டும் தனியே காணப்படும் ஆவணங்கள், “அல்வா” மட்டும் தனியே காணப்படும் ஆவணங்கள், “தாமிரபரணி” மட்டும் தனியே காணப்படும் ஆவணங்கள் என அனைத்து ஆவணங்களும் அதன் ஐ.டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் ஐ.டி எந்த வலைத்தளத்தை குறிக்கிறது என சரியாக ஆராய்ந்து அவ்வளைத்தளங்களின் லிங்க் (உரலி) நமக்கு அளிக்கப்படுகிறது.
கூகுளை எடுத்துக் கொண்டால் சில வினாடிகளிலேயே நமக்கு பல ஆயிரக்கணக்கான வலைத்தளங்களின் உரலிகளை அளிக்கிறது. அதற்கு சர்ச்சிங் அல்காரிதம் (searching algorithm), இன்டெக்ஸ் (index) செய்யும் முறை மற்றும் அதை ஸ்டோர் செய்யும் முறை, வினா விரிவாக்க முறை ஆகியவை மிகுந்த செயல்திறனுடன் இருக்க வேண்டும். உபயோகிக்க படும் கணினிகளின் ஸ்டோரேஜ் கேபாசிட்டி (storage capacity) மற்றும் ரேம்- கேபாசிட்டி (RAM capacity) அதிகமாக இருத்தல் வேண்டும்.
ஆஃப்லைன் செயல்பாடுகள் பற்றிய விபரங்களை அடுத்த வாரமும் பார்ப்போம்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!
– சுபலலிதா