Search

கனவே கலையாதே

தொலைபேசி அழைப்பில்

“டேய் எங்க இருக்க ? மணி 11 ஆகுது எப்போ வீட்டுக்கு வருவ ? “ என்றார் அர்ஜுனின் தாய்.

” ஆபீஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு, முடிச்சிட்டு  அரை மணி நேரத்துல கெளம்பிடுவேன்”.  என்றான் அர்ஜுன்.

சீக்கிரம் சீக்கிரம் வந்து சேரு .. ராத்திரி நேரம் பஸ்சு கூட இருக்காது, ஆட்டோ புடிச்சி வா” என்றார் அவர்.  

சரியாக அரைமணிநேரம் கழித்து ஆபீசில் இருந்து புறபட்டான் ஆட்டோவில். நல்ல சோர்வுடன் காணபட்டான்.

ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருக்க வழியில் ஒரு பெண் ஆட்டோவை நோக்கி கையை நீட்டியதை கண்டான் அர்ஜுன்.

“வண்டிய நிறுத்துங்க” என்றான் ஆட்டோ டிரைவரிடம்.

வண்டியை நிறுத்திய பெண்,  “நேதாஜி நகர் போகணும் என்றால்”.

அவளை பார்த்ததும் அர்ஜுனுக்கு பேச்சி வரவில்லை.. தடுமாறியபடியே ஐயோ வாங்க, வாங்க ஒன்னும் பிரச்சனை இல்லை என்றான்.

ஆட்டோவில் இருவருக்கும் இடையில் சிறு இடைவேளி இருந்தது.

ஏதோ அவனுக்குள் பேசிகொண்டான்,ஒரு முடிவுக்கும் வந்தான்.

“நான் உங்கள ஏற்கனவே பார்த்திருக்கேன்” என்றான்.

அவள் திரும்பி அவனை பார்த்தல்.

ஒரு நொடி அமைதியாக இருந்தவன்,

இரண்டு நாளுக்கு முன்னாடி, பஸ்ல பார்த்தேன், கிரீன் கலர் சுடிதார்போட்டிருந்தீங்க. உங்கள தவிர வேறு  யாரையும் பார்க்க என் கண்ணுக்குபிடிகள. உங்கள மட்டுமே பார்த்துட்டு இருந்தேன், நீங்க இறங்கும் வரை. நீங்கபோனதும் உங்கள மறுபடியும் பார்க்க மாட்டோமான்னு மனசு கெடந்து தவிச்சிது.நெனைச்சா மாதிரி இப்போ உங்களோட பேசிட்டு இருக்கேன்”.

 என்று சொல்லி முடித்தான் அர்ஜுன்    

சிரித்தால், அவளுக்கு அர்ஜுன் மேல் கோவமில்லை, அவன் கூறியதை பெரிதாக எடுத்துக்கொள்ளவுமில்லை.

என்ன ஒரு தடவ பார்த்தீங்க,”இப்போ காதல்னு சொல்ல வரீங்களா” என்றால். 

எனக்குநீங்க யாருன்னு கூட தெரியாது. பார்த்தது கூட இல்ல..உங்களுக்கும் என்னைபற்றி எதுவும் தெரியாது. நான் இப்போ என்ன சொல்லனும்னு எதிர்பாக்குறீங்கஎன்றால் சிரித்துகொண்டே.

சரி உங்களுக்கு அது தான பிரச்சனை. என் பேரு அர்ஜுன்,  ford  கம்பெனில டிசைன்  இன்ஜினியர்.. நீங்க ? ” என்றான்.

 உங்களுக்கு நான் பதில் சொல்லனுமா? என்றால் அவள்.

நீங்க சொல்லுவீங்க எனக்கு தெரியும் என்றான் அர்ஜுன்.அதெப்படி சொல்றீங்க அவ்ளோ நம்பிகையோட என்றால் அவள்…

என்ன பிடிக்காட்டி நீங்க இவ்ளோ நேரம் என்னோட பேசி இருக்க மாடீங்க என்றான் அவன்.

சிரித்துகொண்டே என் பேரு சந்தியா என்றால்.

அப்போ, என்னை பிடிச்சி இருக்கா ? என்றான் .  

பார்க்கஸ்மார்டா தான இருக்க.. நல்ல வேலையும் கூட இதெல்லாம் விட தகிரியமா நீஎன்கிட்ட உன் மனசுல இருபத சொன்னியே அது ரொம்ப பிடிச்சி இருக்கு. உன்ன லவ்பண்ணலாம் தப்பில்லை என்றால்.

இப்படி எல்லாமே இவ்ளோ சீக்கிரம் ஈசியாநடந்துடும்ன்னு அவன் எதிர்பார்கள. அவனால எதுவும் பேச முடியல. சந்தோசம்மட்டும் தான முழுசா தெரிஞ்சிது.

இருவருக்கும் இடையில் இடைவேளி குறைந்தது.     

அவள் கையை பிடித்துகொண்டான்,  நீ என் கூடவே இருக்கணும்னு தோணுது. இனி நீ இல்லாம ஒரு நொடி கூட என்னால  இருக்க முடியாது என்றான்.

அவசரபடாத,கொஞ்சநாள் பழகுவோம்,ரெண்டுபேரும் நல்லா புரிஞ்சிக்கணும்.. அப்புறம் நானே என்வீட்டுல சொல்லுறேன். நீயும் உன் வீட்டுல சொல்லு என்றால்.

உன் மொபைல் நம்பர் கொடு.. நானே நாளைக்கு பேசுறேன் என்று கூறி நம்பர் வாங்கி கொண்டால்  

அவள் இறங்கும் இடம் வந்தது, அவன் அவள் கையை பிடித்துகொண்டான்.

அவசியம் நீ இப்போ என்ன விட்டு போய் தான் ஆகணுமா? என்றான்.

 வீட்டுல தேடுவாங்க, நான் நாளைக்கு கால் பண்றேன் இப்போ விடு என்றால் அவள்.

 சந்தியா போகாத போகாத ப்ளீஸ் என்று சொல்லிகொன்டிருக்க, ” சார் சார் , எழுந்துருங்க சார் நீங்க கேட்ட இடம் வந்துடுச்சி என்றார் ஆட்டோ டிரைவர்.

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து எழுந்தவன்,என் கூட வந்த சந்தியா எங்கே என்றான்  டிரைவரிடம்.

என்னசார் கணவா?, சந்தியா விந்தியான்னு ஓலரிக்கிட்டு  இருக்கீங்க.. சீக்கிரம்மீடர கட் பண்ணுங்க நான் போகணும் என்றார் ஆட்டோ டிரைவர்