அவள் சென்றதும்,மாடியில் உள்ள தனது அறைக்கு சென்றான் ராம்.
டேய் என்னடா இதெல்லாம் ? என்றால் புஷ்பா.
உனக்கு தான் எல்லாம் தெரியும்ல அப்புறம் என்ன கேள்வி என்றான் ராம்.
புஷ்பா -தெளிவா சொல்லு என்ன நடக்குது?
ராம் – இன்னும் என்ன தெளிவா சொல்லணும்.. நான் அவல லவ் பண்றேன். போதுமா ??.
புஷ்பா – அவளும் உன்ன லவ் பண்றாளா? .
ராம் – இல்ல, ஆனா சீக்கிரமே அது நடக்கும்.
புஷ்பா – எனக்கு அவல சுத்தமா பிடிக்கல.
ராம் – உன் விருபத்த யார் கேட்டா? எனக்கு பிடிச்சி இருக்கு அவ்ளோ தான்.
புஷ்பா – டேய், நீ இப்படி எல்லாம் என்னோட பேசினதே இல்லையே டா.. இப்போ மட்டும் எப்படி?
ராம் – சரி உனக்கென்ன அவ மேல இப்படி ஒரு கோவம்.
புஷ்பா – எனக்கு தெரியும்..பல பேரை நான் பாத்திருக்கிறேன். அவ சரி இல்ல அவ்ளோ தான். அம்மா அப்பா இதுக்கு சரி ன்னு சொல்லுவாங்கன்னு உனக்கு தோணுதா?
ராம் – அத பத்தி எல்லாம் இன்னும் யோசிக்கல.
புஷ்பா – ஹரி, கோகுல் இவங்களுக்கு இதெல்லாம் தெரியுமா? அவங்க என்ன சொல்றாங்க ?
ராம் – கூடவே இருக்காங்க தெரியாதா? அவங்க என்ன யோசிக்கறாங்க என்பது எனக்கு அவசியமில்லை ..
புஷ்பா – நீ எல்லாரையும் தூக்கி எரியுற அவளுக்காக.. ஒரு நாள் தனியா கஷ்டபடுவ அப்போ பேசுறேன்.. இப்போ நான் என்ன சொன்னாலும் உனக்கு புரியாது.
ஒரு வருடத்திற்கும் மேலான கசப்பான அனுபவங்களுக்கு பிறகு, வாழ்கையின் பல உண்மைகளை புரிந்து கொண்டான் ராம்..
ஒரு நாள் அக்கா புஷ்பாவின் அறைக்கு சென்றான்.
அக்கா வேலை இருக்கா ?
இல்லை என்ன விஷயம் சொல்லுடா.
ராம் சிரித்துகொண்டே ..
நீ சொன்னது தான் சரி என்றான் .
அவளும் பதிலுக்கு சிரித்துகொண்டே. நீ ரொம்ப லேட் டா என்றால்.
என்னோட இருக்கும் எல்லாருக்கும் அவ மேல தான் கோவம். அவ என்னமோ என்னஏமாத்தினா மாதிரி. உண்மை என்னவோ அவ என்ன பிடிக்கும்ன்னு சொல்லவே இல்ல..நானே தான் அவ பின்னாடி அலைஞ்சேன். இப்போ வெறுத்து போய் இருக்கேன், இதுலஅவ தப்பு என்ன இருக்குனு எனக்கு தெரியல. எனக்கு என் மேல தான் கோவம் வேறயார் மீதுமில்லை என்று புலம்பிக்கொண்டிருந்தான் ராம்.
டேய் அவ சாக்கடை டா .. சாக்கடையில விழலைன்னு சந்தோஷபட்டுகோ என்றால் புஷ்பா.
என் கண்ணுக்கு அவ சாக்கடையா தெரியல,வெறும் குட்டையா இருக்கலாம். சாக்கடை எல்லாம் எவ்ளோ மோசமா இருக்கும்னு என் ஆபீஸ்ல பார்த்துபுரிஞ்சிகிட்டேன். ஆனா இப்போ குட்டையா இருப்பது பின்னாடி சாக்கடையா மாறிடகூடாது என்பது தான் பயம் என்றான் ராம்.
வெட்டி தனமா யோசிக்காம போய் உருப்படியான வேலைய பாருடா என்றால் புஷ்பா..
சரி இப்போவாது நீ சொல்றத கேட்குறேன் .. நான் போய் தூங்குறேன் என்று கூறி நடையை கட்டினான் ராம்.