இரண்டு ஆண்களுக்கிடையே நிலவும் ஆத்மார்த்தமான நெருக்கத்தையும் நேசத்தையும் சித்தரிக்கும் படம் தோழா. மாற்றுத்திறனாளியாக நடிக்கும் நாகர்ஜுனாவின் பன்முக திறமையை இப்படம் வெளிபடுத்தும். இது அவரது வாழ்நாளில் நடிக்கும் சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாகக் கண்டிப்பாக அமையும். படத்தில், அவரது உற்றத் தோழனாக கார்த்தி வாழ்ந்துள்ளார். கதாநாயாகியாக தமன்னா நடிக்கிறார்.
படப்பிடிப்பு முடிந்து, இப்படம் இந்த ஆண்டு மார்ச்சில் படம் வெளிவர உள்ளது. வாழ்வைக் கொண்டாடும் இப்படம், இரண்டு நண்பர்களுக்கிடையேயான உணர்ச்சிகரமான பயணத்தைச் சொல்கிறது.
பிரகாஷ் ராஜ், விவேக், மறைந்து விட்ட குணசித்திர நடிகை கல்பனா போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளனர். பிரான்ஸ், பல்கேரியா, ஸ்லோவேனியா போன்ற நாடுகளிலும், இந்தியாவிலும் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். இதுவரை திரையில் கண்டிராத புதிய இடங்களில் எல்லாம் ஒளிப்பதிவு செய்துள்ளார் P.S.வினோத். படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்க, படத்தை இயக்கியுள்ளது இயக்குநர் வம்சியாகும்.