
மனநல மருத்துவரான சந்தானம் தன்னிடம் வரும் நோயாளிகளின் பிரச்சினையை ஒருவரியில் சொல்லச் சொல்லிக் கேட்கிறார். அது பிடித்திருந்தால் மட்டுமே ட்ரீட்மென்ட் கொடுக்கும் வித்தியாசமான டாக்டர். “கண்ணா லட்டு திண்ண ஆசையா” சேது சொல்லும் ஒரு “டபுள் ட்ராக்” ஒன்லைனர் பிடித்துப் போக அவருக்கு உதவுகிறேன் பேர்வழி என களமிறங்கி சந்தானம் கலக்கும் காமெடி பட்டாசுதான் வாங்ஸ் விஷன் தயாரிக்கும் “வாலிபராஜா“.
“இந்தப் படத்தில் சந்தானத்தின் காமெடி பெரிய அளவில் பேசப்படும். ஹீரோவின் குழப்பத்தைத் தீர்த்து வைக்கும் சைக்யாட்ரிஸ்ட், சந்தானம் மாதிரி ஒருத்தரா இருந்தா காட்சிகள் கலகலன்னு இருக்கும்ல. அதுதான் முழுப் படம்” என்கிறார் இயக்குநர். படத்தில் சந்தானத்தின் பஞ்சுக்கும் பஞ்சமில்லை.
‘உன் காதலை போரடிக்காம பார்த்துகிட்ட, அது உன்னை பீர் அடிக்காம பாத்துக்கும்’,
‘ஒரு டாக்டரால முடியாதது ஒரு குவார்ட்டரால முடியும்’,
‘மாடு முன்னாடி போனா முட்டும்.. ஃபிகர் பின்னாடி போனா திட்டும். ஆனா ரெண்டயுமே மேய்க்கிறது ரொம்ப கஷ்டம்’
என நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.
படத்தில் சிச்சுவேஷனோட பார்க்கும்போது, பல புத்திசாலித்தனமான காமெடிகளையும் இதில் சந்தானம் பண்ணியிருகிறாராம். சேது, விசாகா, நுஷ்ரத், ஜெயப்பிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, தேவதர்ஷினி, வி.டி.வி.கணேஷ், நீலிமா, மீரா கிருஷ்ணன், சித்ராலட்சுமணன், கனல் கண்ணன், சந்தான பாரதி, பஞ்சு சுப்பு என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே பங்கு பெறுகிறது. இந்தப் படத்தை கே.வி.ஆனந்திடம் உதவியாளராக இருந்த சாய் கோகுல் ராம்நாத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.