இந்தியாவில் கார் வாங்கும் நடுத்தர வருவாய் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது. அவர்களை குறிவைத்து டாடா நிறுவனம் ஒருலட்சம் ரூபாய்க்கு நனோ வகை கார்களை தயாரித்து அறிமுகம் செய்தது. அடுத்தக்கட்டமாக தண்ணீரில் ஓடும் காரை தயாரிக்க டாடா நிறுவன தலைவர் ரத்தன் டாடா முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் முதல் கட்டமாக 75 கோடி ரூபாயை முதலிடு செய்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விக்கும் விலையில் தண்ணீரில் கார் ஓடினால் நல்லதுதான்.
முதலில் சுத்தமான காற்று சொர்ப்ப அளவிலேனும் கிடைக்கும் மதிய வெயிலில் புழுதிக்காற்றில் முகத்தை மூடிக்கொண்டு பாலைவன வாசிகளாட்டம் நடக்கும் அவஸ்தை குறையும்.
அடுத்ததாக பெட்ரோல் பங்கில் காத்திருக்க வேணாம் மண்ணென்னை கலந்து இருக்குமோன்னு பயத்தோடு வண்டி ஓட்ட வேணாம்.
மிக முக்கியமாக பெட்ரோல் விலை ஏறிப்போச்சி லாரி வாடகை கூடிப்போச்சி அதனால பால் விலை காய்கறி விலை குண்டூசி விலை கூட கூட்டவேண்டியதாப் போச்சின்னு வியாபாரிங்க புரூடா விட முடியாது.
இப்படி எத்தனையோ சவுரியம் இருக்குதுதான் நினைச்சி பார்த்தாலே ஜிவ்வுன்னு சிலிர்ப்பா தோனுதுதான்.
ஆனா கார் ஓட்ட தண்ணீக்கு எங்கே போறது? மழை நல்லா கொட்டினாலும் ஏரிக் குளமெல்லாம் பிளாட் போடப்பட்டதால காணாம போச்சி.
வாய்க்கால் எல்லாவற்றையும் ஆக்கிரமிச்சி வீடு கட்டியாச்சி.
குட்டையக் கூட விட்டு வைக்காம வேட்டையாடியாச்சி.
ஆற்றில மணலை எல்லாம் வாரி காய வைச்சாச்சி. உண்மையான நிலமை குடிக்க குளிக்க கொப்பளிக்க குத்தவச்சா கழுவக்கூட தண்ணி இல்லை.
இந்த நிலையில கார் ஓட்ட தண்ணிக்கு எங்கே போவது?

– யோகி ஸ்ரீராமானந்த குரு