Shadow

கிராமத்தில் விழும் விண்கல்

Appuchi Graamam story

EYE CATCH MULTIMEDIA நிறுவனத்தின் தயாரிப்பில் அப்படிப்பட்ட அறிவியல் பின்னணியில் ஒரு கிராமத்துக் கதையாக உருவாகியிருக்கும் படம், ‘அப்புச்சி கிராமம்’.

பிறந்த தேதியைத் தெரிந்த கொண்ட நமக்கு, நம்முடைய இறக்கும் தேதி தெரிந்தால் நம் வாழ்க்கையிலும், நமக்குள்ளும் எப்படியெல்லாம் மாற்றங்கள் ஏற்படும் என்பதே அப்புச்சி கிராமத்தின் மையக்கரு.

தமிழ் சினிமாவின் திறமையை பாலிவுட்டில் அதிர வைக்கும் வெற்றியின் மூலம் நிரூபித்த இயக்குநர் திரு.A.R.முருகதாஸிடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய VI.ஆனந்த், ‘அப்புச்சி கிராமம்’ படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார். “அறிவியல் பின்னணியில் கிராமத்துக் கதை எடுக்கும் தைரியம் எனக்கே இல்லை. VI.ஆனந்த அதைப் பண்றார் என்பது பெருமையாக இருக்கு” என்றார் முருகதாஸ்.

பல படங்களில் இணைந்து நடித்த நாசரும் கிட்டியும், இப்படத்தில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு இணைந்து நடித்துள்ளனர். மேலும் கஞ்சா கருப்பு, சிங்கம் புலி, கும்கி ஜோசப், G.M.குமார், மீரா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திருப்பூர் அருகிலுள்ள பல்லடம் என்ற ஊரில் வெங்கடாபுரம் என்ற கிராமத்தில் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

பிரபல ஹாலிவுட் ஒளிப்பதிவாளரான BEN HUDSON-இடம் பணி புரிந்த பிரசாத் G.K., இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆஸ்கார் தமிழன் இசைப்புயல் A.R.ரஹ்மானின் பட்டறையில் பட்டைத் தீட்டப்பட்ட விஷால்.C இசையமைத்துள்ளார். இவர் ஏற்கெனவே ‘இனம்’ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அறிவியல் பின்னணியைக் கொண்ட கதையாக இருந்தாலும் மிகவும் எளிய வார்த்தைகளால் வசனத்தை எழுதியுள்ளார் ஜினேஷ். மிஷ்கனின், ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தில் கலை இயக்குநராக அறிமுகமான சதீஸ் குமார் இப்படத்திற்கு பிரம்மாண்டமான முறையில் கலை இயக்கம் செய்துள்ளார். படத்தொகுப்பை சசிகுமார் செய்துள்ளார்.

அறிவியல் புனைக்கதை என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இப்படம் கவருமென படத்தின் தயாரிப்பாளர்களான விஷ்ணு முரளீயும் செந்தில்குமாரும் நம்பிக்கையுடன் தெரிவித்தார்கள்.