Shadow

“குட்டிப் பயலே, எதை தேடி நீ ஓடுற?” – சிம்பு

சிம்பு  செய்தியில்  இல்லாத நாளே இல்லை! 

தனது ஆன்மீகப் பயணம், அவர் படங்கள் குறித்த சர்ச்சை என்று  செய்தியில் நிறைந்த வண்ணம் இருப்பார். இப்போது அவருக்கு பிடித்தமான, தோதுவான களத்தில் மீண்டும் இறங்குகிறார். அதாவது தானே பாடல் எழுதி, தன்னுடைய குரலிலேயே பாடவும் உள்ளார். தான் நடிக்கும் படங்களுக்கு மட்டுமே இவ்விரண்டையும் சிம்பு செய்வது வாடிக்கை. தற்போது தன்னுடைய நண்பரும் தயாரிப்பாளரும் நடிகருமான வி.டி.வி.கணேஷ் தயாரித்து நடிக்கும் படத்தில் ஒரு முக்கியமான பிரதானமான பாத்திரத்தில்  நடிப்பதோடு, கதை விவாதத்திலும் கலந்துக் கொள்கிறார்.  பெரும் ஈடுப்பாட்டுடன் இருந்து வரும் சிம்பு தொடர்ந்து தனது பங்களிப்பாக ஒரு பாடலை இயற்றி சொந்த குரலில் பாடவும் செய்து உள்ளார். அவர் இயற்றிப் பாடிய பாடல் வரிகள் இதுதான்.

குட்டிப் பயலே.. குட்டிப் பயலே..
எதை தேடி நீ ஓடுற?

சுட்டிப் பயலே.. சுட்டிப் பயலே..  
என்னத்தை நீ தேடுற?

இந்தப் பாடல் நிச்சயம் இப்படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்கிறார் இயக்குநர் வின்சென்ட் செல்வா.