Shadow

கேரளத் திரைப்பட விழாவில் பண்ணையாரும் பத்மினியும்

Pannaiyaarum Padmaniyum - Kerala Film festival

திக்கெட்டும் பயணித்து, ‘பண்ணையாரும் பத்மினியும்’ படம் பல விருதுகளை அள்ளி வருகிறது.

ஹபிடெட் ஃபிலிம் ஃபெஸ்டிவல், ப்ரேகு ஃபிலிம் ஃபெஸ்டிவல், ஜாக்ரான் ஃபிலிம் ஃபெஸ்டிவல் என பல நாடுகளின் திரைப்பட விழாக்களைப் பார்த்த பண்ணையாரும் பத்மினியும், இந்த வருடம் பெங்களூருவில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தியப் படங்களுக்கான வரிசையில் தேர்வுக்குழு சிறந்த திரைப்படம் என்ற விருது வாங்கியது.

இந்த வருடம் கேரளா சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படும் ஒரே தமிழ் படம் என்ற அந்தஸ்தையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கியுள்ள அருண் கூறுகையில், “இவ்வகையான விருதுகள் எங்களைப் போலுள்ள வளரும் கலைஞர்களுக்கு ஒரு ஊக்கமாய் அமைகிறது” என்கிறார்.
இப்படம் வரவிருக்கும் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிலும் திரையிடப்படவுள்ளது. இவ்வாறான திரைப்படங்கள் அதிகம் தமிழில் வருமானால் தமிழ் சினிமா சர்வதேச அளவில் நன்மதிப்பை பெறுவது திண்ணம்.