Shadow

கோவக்காரப் பறவைகள்

Angry Birds

சோனி பிக்சர்ஸின், ‘The Angry Birds Movie’ ஆங்கிலத்திலும் தமிழிலும் (தமிழ்த் தலைப்பும் அதுவே) மே 27 ஆம் தேதி வெளிவர உள்ளது.

இப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னோடியாக, 3 D அனிமேஷன் கார்டூன் படமான இதில் இடம் பெற்றுள்ள கதாபாத்திரங்கள் தத்தம் உடை அலங்காரங்களோடு, சமீபத்தில், சென்னை நகரில் உள்ள முக்கிய மால்கள் (Malls) மற்றும் பன்னடக்கு அரங்குகளில் உலா சென்று வலம் வந்தார்கள்!

கோடை கால விடுமுறை தொடங்கும் நேரமாகையால், அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் படை சூழ வந்து, தங்களுக்கு மிகவும் பிடித்த ஆங்ரி பேர்ட்ஸ் கதாபாத்திரங்களுடன் கொஞ்சி விளையாடுவது, புகைப்படம் எடுத்துக் கொள்வதென பல விதமான செயல்பாட்டில் எடுபட்டார்கள்!

Red, Chuck & Bomb ஆகிய மூன்று பறவை கதாபாத்திரங்களே படத்தில் பிரதான வேடத்தில் தோன்றுகின்றன. அமைதியாக ஒரே குடும்பமாக இப்பறவை இனம் ஒரு தீவில் வாழ்ந்து வர, எதிர்பாராத விதமாக ஒரு பன்றிக் கூட்டம் அங்கு வர, பறவை இனம், ஒன்று கூடு, பன்றிக் கூட்டத்தை எப்படிச் சமாளித்து செயல்படுகின்றன என்பதுதான் படத்தின் சாரம்!

ஃபெர்கல் ரெய்லி, க்லே கெட்டிஸ் ஆகிய இருவரும், ஜான் விட்டின் கதையை நேர்த்தியாக இயக்கியுள்ளார்கள்.

2009 இல் வெளியாகிய Video Game Franchise-ஐ மையமாக வைத்து, சுமார் 80 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில், இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கோடை காலத்தில், குழந்தைகள் மட்டுமில்லாமல், பெரியவர்களும், ஏன் இள வயதினர் கூடக் கண்டு ரசிக்கும் வண்ணம் இப்படத்தை உருவாக்கியுள்ளனர். ஹீட்டர் பெரெய்ரா இசையமைக்க, கென்ட் பேடா படத்தைக் கச்சிதமாகத் தொகுத்துள்ளார். 95 நிமிடங்கள் ஓட்ட நேரம் கொண்டது, இந்தப் படம்.