‘எக்ஸ்-மேன் – கடந்த காலத்தின் எதிர்காலம்’ திரைப்படத்தின் விளம்பரத் தூதராக உள்ளார் ஹுக் ஜாக்மன். அவர் படத்தின் பிரதான பாத்திரங்களுக்கு ஏற்படும் நெருக்கடியை, கிரிக்கெட் விளையாட்டுடன் ஒப்பிட்டுப் பேசினார்.
“கிரிக்கெட் ஒரு மைண்ட் கேம். மன உறுதியை சோதனை செய்யும் ஒரு விளையாட்டு.
சச்சின் டெண்டுல்கர் அதில் கரை கண்ட மிகத் திறமையான வீரர். அவரது மனவுறுதியும், அதை அவர் மிகச் சுலபமாக களத்தில் பயன்படுத்துவதையும் கண்டு ஆச்சரியப்பட்டுள்ளேன். ஆக சச்சினைப் போன்றே மனோபலம் கொண்ட ப்ரொஃபசர் சேவியர், எனக்கு கேப்டனாக இருப்பதையே நான் விரும்புகிறேன்.
ஆனா வோல்வரின் மிக மோசமான கிரிக்கெட் வீரர். கொஞ்சம் கூட பொறுமையே இல்லாதவர்.
ஆடு களத்தில் என்ன, எப்போது, எப்படி நடக்கும் என்பதை கிரகிப்பது சுலபமானது அல்ல. அதில் நிரந்தரமாக ஜெயிப்பது என்பது மன உறுதி மிக்க சச்சின் போன்றவர்களால் தான் முடியும்” என்றார் வோல்வரினாக நடிக்கும் ஹக் ஜேக்மேன்.