
ரீச் மீடியா சொல்யூஷன் என்னும் புதிய பட நிறுவனம், சஹானா ஸ்டுடியோஸுடன் இணைந்து, “ஜூலியும் நாலு பேரும்” என்ற படத்தைத் தயாரிக்கிறது. இளம் இயக்குநரான சதீஷ்.R.V-க்கு இது முதற்படம். இப்படத்தைக்குறித்து இயக்குநர் சதீஷ்.R.V கூறுகையில், “இப்படம் சர்வதேச அளவில் நடக்கும் நாய்க் கடத்தலைப் பற்றிய படம். அது மட்டுமின்றி முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட காமெடிப் படம்”என்கிறார்.
தமிழ் சினிமா ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது இப்படத்தின் “ஃபர்ஸ்ட் லுக்”. இப்படத்தின் மூலம், பேய் சீஸனைப் போல் நாய் சீஸனைத் துவங்கி வைத்துவிடுவார் போல் தெரிகிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் சதீஷ் கூறுகையில், “விஜய் டி.வி. புகழ் அமுதவானன் மற்றும் ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஜம்முவைச் சேர்ந்த ரீனா என்ற பெண் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
இப்படத்தின் ஹீரோ அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டு, “ஜூலி” என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்ட, Beagle வகையைச் சேர்ந்த லக்கி என்ற நாய்” என்கிறார்.
இப்படத்தில் K.A.பாஸ்கர், ஒளிப்பதிவாளராகவும், ரகு ஸ்ரவன் குமார், இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார்கள்.
பணிக்குழு:
>> தயாரிப்பு – ரீச் மீடியா சொல்யூஷன் & சஹானா ஸ்டுடியோஸ்
>> இணை தயாரிப்பு – N.சுவேதா தேவி
>> தயாரிப்பு மேலாளர் – N.R.ஷிவக்குமார்
>> எழுத்து, இயக்கம் – சதீஷ் R.V.
>> ஒளிப்பதிவு – K.A.பாஸ்கர்
>> படத்தொகுப்பு – V.A.மழை தாசன்
>> இசை – ரகு ஸ்ரவன் குமார்
>> கலை – K.R.சிட்டி பாபு
>> பாடல் – கணேஷ் & மதன் ராஜ்
>> நடனம் – Z.அருண்
>> மக்கள் தொடர்பு – நிகில்