சாளரக் கதவுகள்
காத்துக் கொண்டிருக்கிறது
திறக்கப்படும் நேரத்திற்காக
காத்திருப்பின் முடிவில்
வேகமாக வெளியேசெல்லும்
அதுவரையில் அறையினுள்
அடங்கிக் கிடந்தவை
மீண்டும் அறையினுள்
சிறைப்பட வரலாம்
தூசும் துரும்பும்.
அதுபோலத்தான்
மூடியிருக்கும் சிலரின்
மனதில் நுழைய
முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்
– இராஜப்ரியன்