முதலாளியின் பிறந்தநாளைமுன்னிட்டு அன்று அலுவலகத்தில் அணைவருக்கும் சிக்கன் பிரியாணியும் வெஜிடபுள் பிரியாணியும் அளிக்கபட்டது.
அந்த அழுவலகத்தில் வேலைசெயும் மூன்று சக்கர கூட்ஸ் வண்டியின் ஓட்டுனர் ஒருவர்,
“சரியான உணவில்லாமல் வீட்டில் தவிக்கும் மனைவியை எண்ணி,அந்த பிரியாணியை உண்ணவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் வேதனையில் திண்டாடினார்”.
மறுபக்கம் அதே அலுவலகத்தில் பெருக்கி சுத்தம் செய்யும் பெண்,
“வீட்டில் குழந்தைகளுக்கு மதிய உணவிற்காக ஒன்றுமே செய்துதரமுடியாமல் அவர்கள் பசியில் தவிக்க, தான் மட்டும் அந்த பிரியாணியை உன்ன மனமில்லாமல் இருந்தார்.”
இவர்களின் கவலை ஒருபக்கமிருக்க,
அங்கு வேலை செய்யும் மேல்நிலை ஊழியர்களில் ஒருவர் அந்த உணவை பார்த்து
“இது என்ன சார், பிரியாணி….. நான் 2 நாட்களுக்கு முன் 5 ஸ்டார் ஹோட்டல்லில் சாப்டேன் பாருங்க அது தான் சார் பிரியாணி… இது சுத்த வேஸ்ட்….”
என்று நகைஆடிகொண்டே திண்ணு முடித்தார்….