“சிலந்தி” படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தவர் சந்துரு. இவர் ராஜஷந்ரு (Rajashanthru) என்று தனது பெயரை மாற்றிக் கொண்டிருப்பதுடன். “மது மாது சூது (Madhu Maadhu Soodhu)” என்ற படத்தைத் தயாரித்து இயக்கி ஹீரோவாக நடிக்கிறார்.
இப்படத்தின் கதாநாயகிகளாக பெங்களூரைச் சேர்ந்த மாடல் சந்தனா மற்றும் சென்னையைச் சேர்ந்த விக்னேஷா அறிமுகமாகிறார்கள் மற்றும் நிறைய புதுமுக நடிகை, நடிகர்கள் அறிமுகமாகிறார்கள்
இப்படத்தைப் பற்றி ராஜஷந்ரு, “போதைக்கு அடிமையான ஒரு இளைஞனின் வாழ்க்கையை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளது. 2014 புத்தாண்டு பிறக்கும் அந்த ராத்திரியில் ஒரு ஹைடெக்கான பாரில் அந்த இளைஞ சந்திக்கும் எதிர்பாராத சம்பவங்களின் தொகுப்பை வைத்து பரபரப்பாக இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளோம்.
திருப்பூரில் உள்ள ஒரு பாரை வாடகைக்கு எடுத்து அதன் உள்கட்டமைப்பை (interior) ரூபாய் 50-லட்சம் செலவில் மாற்றி அமைத்து 40-நாட்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம். மே மாதம் வெளியிட தயாராக உள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விரைவாக நடந்து கொண்டிருக்கிறது.
இப்படத்தில் ஸ்ரீனி என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார். இவர் 200 க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரபல ஒளிப்பதிவாளர் மதி-யின் உதவியாளர்கள் லி & MMS.சங்கர் ஒளிப்பதிவாளர்களாக அறிமுகமாகிறார்கள் மற்றும் பிரபல எடிட்டர் கோபிகிருஷ்ணாவின் உதவியாளர் கே.ஆனந்தி D.F.T., எடிட்டராக அறிமுகமாகிறார். சண்டை பயிற்சியை நாக்-அவுட் நந்தா செய்துள்ளார்.
பணிக்குழு:
>> எழுத்து, இயக்கம் – ராஜஷந்ரு
>> தயாரிப்பு – ராஜஷந்ரு பிலிம்ஸ் புரொடக்ஷன்
>> டிசைன்ஸ் – Mitrra Media
>> மக்கள் தொடர்பு – நிகில் முருகன்