
‘இந்தப் படத்தில் சரண்யா பொன்வண்ணன், சென்னை குடிசைப் பகுதியை சேர்ந்த ஒரு சராசரி தாயாக நடிக்கிறார். இதற்காக சென்னைக்கென்று உள்ள பிரத்தியேக சென்னைத் தமிழைக் கற்றுக் கொண்டார். அது மட்டுமல்லாமல்.. அந்த பாஷையில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறார் ” என்றார் ‘என்னமோ நடக்குது’ படத்தின் இயக்குநரான ராஜ பாண்டி.
‘என்னமோ நடக்குது’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஒரு குடிசைப் பகுதியில் நடந்தது . இடைவிடாமல் ஐந்துநாட்கள் நடந்த படப்பிடிப்பில் அனுபவசாலியான தேசிய விருது பெற்ற சரண்யா எல்லாக் காட்சிகளையும் ஒரே டேக்கில் நடித்து முடித்தார். அவருடன் அந்தக் காட்சிகளில் நடித்த விஜய் வசந்த் சற்று சிரமப்பட்டார் . கடைசி நாளில் நாயகன் விஜய் வசந்துக்கு நீண்ட வசனமும், அழுகையுடன் கூடிய நடிப்பும் தர வேண்டிய காட்சி. நடிப்பாரோ மாட்டோரோ என்று பெரும் சந்தேகத்துடன் இருக்கும் போது அங்கிருந்த எல்லோரையும் சரண்யா உட்பட தன்னுடைய நடிப்பால் கவர்ந்தார் விஜய் வசந்த். ஒரே டேக்கில் நடித்து தானும் ஒரு கை தேர்ந்த நடிகர் தான் என்பதை நிரூபித்து, தேசிய விருது பெற்ற நடிகையிடமே பாராட்டுப் பெற்றார் விஜய் வசந்த்.
பாராட்டியது சென்னை தமிழில்தானா என்பது தான் தெரியவில்லை?