Search

சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா (CWIFF)

CWIFF

‘சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா (CWIFF)’ முதல் முறையாக இவ்வருடம் மே 20 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா, சினிமா துறையில் பெண்களின் முன்னேற்றத்திற்காக நல்ல ஒரு மேடையையும், சிறந்த வாய்ப்புகளையும் உரிய திறமை உள்ளவர்களுக்கு வழங்கி அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும். 20-5-2014 அன்று மாலை ஆறு மணியளவில் வாணி மகாலில் நடைபெற உள்ள தொடக்க விழாவுடன் CWIFF 2014 துவங்கும்.

இவ்விழாவிற்கு 177 திரைப்படங்கள் உலக அளவில் 26 நாடுகளில் இருந்து வந்து குவிந்தன. இவை அனைத்தும் RKV திரையரங்கம், வடபழனியில் மற்றும் PVR திரையரங்கம், அமிஞ்சிக்கரையிலும் 20 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை திரையிடப்படும் .

மொத்தம் நான்கு பிரிவுகளில் திரைப்படங்கள் வகுக்கப்பட்டன. அவை,
          1) குறும்படம் (short film )
          2) விளம்பரப்படம் (ad film )
          3) ஆவணப்படம் (documentary )
          4) முழுநீளத்திரைப்படம் (feature film).

இவற்றை மிகுந்த கவனத்துடன் பார்வையிட்டு தகுதியான படங்களைத் தேர்ந்தெடுத்தது மதனும், பெண் இயக்குநர்களான எஸ்.நந்தினியும் வி.பிரியாவும். இவர்களுடன் க்ரேசி மோகனும் பிரதாப் போத்தனும் ஆலோசகராக உள்ளனர். உலக அளவிலும் CWIFF பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய் பட்கர், ஜெர்மன் நாட்டைச் சார்ந்த நடிகை தேனுகா கந்தராஜா மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த பிரபலங்களும் CWIFF இல் பங்களித்துள்ளனர்.

இறுதியாக 25-5-2014 அன்று மாலை 6 மணி அளவில் விருது வழங்கும் விழா, எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் நடைபெற உள்ளது. வெற்றி வாகை சூடிய திரைப்படங்களுக்கு பரிசாக கோப்பை, வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.