Shadow

‘செல்லாது.. செல்லாது..’ – கே.எஸ்.ரவிக்குமார்

Remo K.S.Ravikumar

சிவகார்த்திகேயன்- கீர்த்தி சுரேஷ் இணையாக நடிக்க, 24 ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் ‘ரெமோ’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். ஒருநாள் அன்றைய நாளுக்கான அவரது சம்பளத்தைக் கொடுத்து விட்டு தயாரிப்பு நிறுவனத்தினர் அலுவலகம் திரும்பியுள்ளனர்.

சற்று நேரத்தில் ரவிக்குமாரிடம் இருந்து ஓர் அழைப்பு, ‘இன்னைக்கு நான் மொத்தமா ஒரு மணி நேரம் கூட நடிக்கல. அதுக்கு எதுக்கு முழு நாள் சம்பளம்?’ என்று கேட்டார். ‘அது என்னவோ அரை நாள் வேலைதான் சார். ஆனா நீங்க ஒரு மணி நேரத்துல முடிச்சுட்டீங்க’ என்று தயாரிப்பு தரப்பில் கூற, ‘அதெல்லாம் முடியாது. தயாரிப்பாளர்கள் கஷ்டம் எனக்குத் தெரியும். தயவு செஞ்சு இந்தப் பணத்தை வாங்கிகோங்க’ என்று சற்றே கண்டிப்பான தொனியில் கூறியுள்ளார். வேறு வழியின்றி தயாரிப்பு நிர்வாகமும் பாதியை வாங்கிக் கொண்டனர்.

“இப்படி ஒரு மனிதரைத் திரையுலகில் சந்திப்பது மிக அரிது. இந்த நல்ல குணமே அவரை இந்த உயரத்துக்கு உயர்த்தி சென்றுள்ளது. மனித நேயமும், தொழிலில் பக்தியும், நேர்மையும் உள்ள ரவிக்குமார் எங்கள் படத்தில் நடிப்பது எங்களுக்கு பெருமை” என்று நெகிழ்சியோடுகூறினார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா.