Shadow

சேட்டை – இசை வெளியீட்டு விழா

“எனக்கு மொழி தெரியாததால் இங்க என்ன நடக்குதுன்னு புரியலை. ஆனா இந்தப் படத்தை எப்படி ஃபேமிலி சினிமாவாக மாத்த முடிஞ்சதுன்னு தெரியலை” என ஆச்சரியமாகக் கேட்டார் ‘டெல்லி பெல்லி’ படத்தின் கதாசிரியர் அக்ஷத் வெர்மா.

சம்பிரதாய நேர்க்கோட்டில் சென்று கொண்டிருந்த விழா கானா பாலா கையில் மைக் கிடைத்ததும் கலகலப்படைந்தது. “எனக்கு இந்தப் படத்தில் எழுத வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. தயாரிப்பாளர் பெயர் கூட சரியா வாயில நுழையலை. ஏதோ ஸ்குரூவாலான்னு சொல்றாங்க. தமண் அண்ணன் இந்தப் படத்துக்கு பாட்டு எழுதணும்னு சொல்லி லேப்டாப்பைத் திறந்து காண்பிச்சார். நிறைய கெட்டவார்த்தைங்க இருக்கிற படமாச்சேன்னு நான் திற்க்கவே வேணாம்னு சொல்லிட்டேன். நானே இப்ப தான் சினிமால பாட்டு எழுத ஆரம்பிச்சிருக்கேன். கெட்ட வார்த்தைல பாட்டு எழுதி.. எனக்கும் தடைப் போட்டாங்கன்னா நான் என்னப் பண்ணுவேன்? அப்புறம் சீன் சொன்னாங்க. காதலிச்சு பொண்ணு ஏமாத்திட்டு வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிக்குது. அதை நிறுத்துற மாதிரி சீன்னு சொன்னாங்க என்று ‘எதைதான் கண்டுட்ட.. நீ புதுசா’ என்ற பாடலை பாடிக் காட்டினார். கானா பாலாவின் இந்தப் பாடலுக்கு ப்ரேம்ஜி மஞ்சள் கலர் கோட் அணிந்து செமையான ஆட்டம் போட்டுள்ளார். இந்த வருடம் தொலைக்காட்சியில் அதிகம் ஒளிபரப்பப்படும்பாடலாக கானா பாலாவின் பாடல் கண்டிப்பாக இருக்கும். கார்க்கி வைரமுத்து தனது 100வது பாடலை சேட்டை படத்தில் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சேட்டை படத்தில் வித்தியாசமான வில்லனாக நடித்துள்ளார் நாசர். “என் பையன்கிட்ட சொன்னேன். உனக்கு ரொம்ப பிடிச்சபடமான ‘டெல்லி பெல்லி’ தமிழ் வெர்ஷனில் நான் நடிக்கிறேன் என சொன்னேன்.என்ன கேரக்டரில் என கேட்டேன். வில்லனாக தான் என்றேன். ‘எப்படி பப்பாஉங்களால நடிக்க முடியும்?’ என ஆச்சரியமாக கேட்டான். ஏன்டா நான் 150படத்துக்கு மேல நடிச்சிருக்கேன். இதுல ஏன் நடிக்க முடியாதுன்னு கேட்டேன்.டெல்லி பெல்லி-ல வில்லனா நடிச்ச ராஜ்க்கு ஆத்லெட் பாடி. அவர் சும்மா நடந்தாலே பல விஷயம் கன்வே ஆகும். உங்களுக்கு தொப்பை விழுந்துடிச்சு. உங்களால எப்படி நடிக்க முடியும் என கேட்டான். அதனால நான் இந்தப் பாத்திரத்தை சேலஞ்சா எடுத்துப் பண்றேன். இதுவரை எந்தப் படத்திற்கும் போடாதஎஃபோர்ட்டை இந்தப் படத்திற்கு போட்டுள்ளேன்” என்றார் நாசர்.

ஏப்ரல்5-ல் படத்தை வெளியிட திட்டமிட உள்ளதாக சொன்ன யூ டி.வி. தனஞ்செயன்னும் இந்தப் படத்தின் திரைக்கதையில் பங்கேற்றியுள்ளார். ‘உங்களை பேச வைக்கமாட்டோம்’ என்று இயக்குனர் பாலாவி்ற்கு உறுதியளித்து விட்டு மேடையில் வந்து அமரும்படி கேட்டுக் கொண்டார் தனஞ்செயன். மேடையேறிய பாலாவிற்கு நடுவில் இடம் ஒதுக்கியிருந்தனர் விழா தொகுப்பாளர்கள். அவர் அதை மறுத்து ஓர் ஓரமாக ஹன்சிகா மோத்வானியின் இடதுப் பக்கம் அமர்ந்தார். அதற்கு முன் ஹன்சிகா பக்கத்தில் அமர்ந்திருந்த ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா வேறு இடத்தில் அமர்ந்தார். அதே போல் அஞ்சலிக்கும், ஹன்சிகாவிற்கும் இடையில் அமர்ந்திருந்த நாசரை எழுப்பி விட்டு ஆர்யாவை அமர செய்தனர்.

தொகுப்பாளினி ரம்யாவின் வில்லங்கமான கேள்விக்கு, “நான் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு.. ஹாலிவுட் பாலிவுட் அளவுக்கு கொண்டு போக ஆசைப்படுறேன்.அதுக்கு நடிக்க தான் முடியலை. சரி ‘லிப்-லாக்’ சீன்லயாவது அந்த ரேஞ்சுக்குகொண்டு போகலாம்னு தான் என் படத்தில் அப்படிக் காட்சி வருது” எனக் குறும்புடன் பதிலளித்தார் ஆர்யா. அதே போல் இயக்குநர் ராஜேஷை காமெடி ஜீனியஸ் என அழைத்த ரம்யாவிடம், “காமெடி ஜீனியசா? எனக்கென்ன அவ்ளோ வயசாஆகிடிச்சு? சுந்தர்.சி சாரை வேணும்னா காமெடி ஜீனியஸ் என சொல்லலாம்”என்றார். சந்தானத்திற்கும் தனக்குமுள்ள நட்பையும் சென்ட்டிமென்ட்டையும் சொல்லி விட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து சொன்னார் ராஜேஷ்.

Leave a Reply