இயக்குநர் விஜய் இயக்கும் ‘சைவம்’ படத்தில் நாசர், சாரா தவிர அனைவருமே புதுமுகங்கள். கூத்துப் பட்டறை கலைஞர்கள், விஞ்ஞானி வித்யா, ஹெலிகாப்டர் மெக்கானிக் விக்கி, நாசரின் மகன் பாஷா என கலந்து கட்டி கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார் விஜய். இதற்கு உதவிய ஷண்முகராஜன், தங்கள் பாத்திரங்களை நடிகர்கள் உணர்ந்து நடிக்க ட்ரெயினிங் கேம்ப் ஒன்றும் நடத்தியுள்ளார்.
“இது என்னுடைய கதை இல்லை. நான் சின்ன பையனாக இருக்கிறப்ப எங்க அம்மா சொன்ன கதை. அவங்கதான் அன்-அஃபீஷியல் ரைட்டர், இந்தப் படத்துக்கு.
தெய்வத் திருமகள் படத்தில், விக்ரமுக்கும் சாராவுக்கும் ஒரு போட்டி இருந்தது. இந்தப் படத்தில், அப்படி நாசர் சாருக்கும் சாராவுக்கும் நடிப்பில் ஒரு போட்டி இருக்கும். ஆனா சைலன்ட்டாக ஸ்கோர் செய்திருப்பது ‘ரே பால்’ என்ற பையன்தான். படம் பார்த்து முடிக்கிறப்ப, கண்டிப்பாக இந்தப் பையனைப் பற்றி எல்லாம் பேசுவார்கள்” என்றார் இயக்குநர் விஜய்.
இவர்களைத் தவிர, இந்தப் படத்தில் மிக முக்கியமான வேடத்தில் சேவல் ஒன்று நடித்துள்ளது. அதன் பெயர் பாப்பா. சாராவுக்கும் பாப்பாக்கும் உள்ள நட்பு பற்றிதான் படத்தின் கதையே!