மர்ம மனிதனான ஜித்தன்-2 கதாபாத்திரத்தை வலுவாகக் கட்டமைக்க படத்தின் இசைத்தரம் மிக மிக அவசியம் எனக் கருத்துகிறார் படத்தின் இயக்குநர் ராகுல்.
“இசையில் அத்தகைய மேஜிக் செய்ய ஸ்ரீகாந்த் தேவாதான் பொருத்தமான நபர். காட்சிகளின் தரத்துக்கு ஏற்றாற்போல் பின்னணி இசை அமைய வேண்டுமென, சில பிரபலமான உலக இசைக் குழுக்களோடு இணைந்து பணியாற்றத் திட்டமிட்டுள்ளோம். படத்தை அழகாகச் செதுக்க போதிய கால அவகாசம் எடுத்துக் கொண்டு, மிகச் சிறந்த படமாக ஜித்தனைக் கொண்டு வருவோம்” என நம்பிக்கையுடன் கூறினார் ராகுல்.