Shadow

ஜீரோ ரூல்ஸ் “49-ஓ”

49-O Koundamani கவுண்டமணி

ஜீரோ ரூல்ஸ் என்டேர்டைன்மென்ட் தயாரிப்பில் , கவுண்டமணி நடிக்கும் 49-ஓ.

சென்னையில் நேற்று துவங்கிய  மழைத்துளி ஒன்று விரைவில் பெரு மழையாக பரவ உள்ளது. இது பெரு  மழை.. சிரிப்பு மழை. Zero rules entertainment என்ற புதிய பட  நிறுவனத்தின் சார்பில் டாக்டர் சிவபாலன் தயாரிக்க, இயக்குநர் கௌதம் வாசு தேவ மேனனின் முன்னாள் இணை இயக்குநர் ஆரோக்கியதாஸ் இயக்கத்தில் உருவாகும் 49-ஓ படப்பிடிப்பில் இந்த சிரிப்பு மழை பெய்தது. 

கதையின் நாயகனாக நடிப்பவர் கவுண்ட மணி என்றால் சிரிப்புக்கு  பஞ்சமா என்ன!!! 

படங்களைத் தேர்வு செய்து நடிக்கும் கவுண்டமணி, இந்தப் படத்தைத் தேர்ந்தெடுக்க படத்தின் தலைப்பான 49-ஓ என்ற பரபரப்பான தலைப்பு மட்டுமின்றி, வித்தியாசமான கதை பின்னணியுமே காரணம் எனலாம்.

தேர்ந்தெடுப்பதா அல்லது ஒதுக்குவதா என்பதே பின்னணி. இந்தப் படத்தில் கவுண்டமணி ஒரு விவசாயி ஆக நடிக்க அவருடன் மயில் சாமி, எம்.எஸ்.பாஸ்கர், திருமுருகன், சோமசுந்தரம் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்க உள்ள இந்தப் படத்தின் இசையமைப்பாளர் கே. பாடல்களை யுக பாரதி இயற்ற பாபு ஒளிப்பதிவு செய்ய, மாய கண்ணனின் கலை வண்ணத்தில், படத்தொகுப்பை பரமேஷ் கிருஷ்ணா செய்கிறார்.    

Leave a Reply