Shadow

டமால் டுமீல் – இசை வெளியீட்டூ விழா

Damaal Dumeel Audio Launch

‘கேமியோ ஃபிலிம்ஸ் (Cameo Films) எனும் புது தயாரிப்பு நிறுவனம், வைபவை நாயகனாகக் கொண்டு டமால் டுமீல் படத்தைத் தயாரித்துள்ளது. ‘ப்ரொக்ளைம் அட்வர்டைசிங் ஏஜென்சி (Proclaim Advertising Agency)’ என்ற விளம்பர நிறுவனம்தான், கேமியோ ஃப்லிம்ஸ் என வெள்ளித்திரையை நோக்கி தனது அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளது.நூறு விளம்பரப் படங்கள் தயாரித்த பின்னரே திரைப்படத் தயாரிப்பில் இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘டமால் டுமீல்’ படம் க்ரைம் காமெடி த்ரில்லர் வகையைச் சார்ந்த படமாம்.படத்தின் நாயகி ரம்யா நம்பீசன். படத்தின் இசையமைப்பாளர் தமன். படத்தின் இயக்குநரான ஸ்ரீ, ஷங்கரின் உதவியாளர். எந்திரன் படத்தில் இவருடன் இன்னொரு உதவியாளராக பணி புரிந்த இயக்குநர் அட்லி, “என்னுடைய முதற்படத்திற்கு இந்த டெக்னிக்கல் டீமைதான் உபயோகிக்கணும்னு நினைச்சேன். ஆனா ஸ்ரீ முந்திக்கிட்டார்” என்றார்.

பாண்டிய நாடு படத்தில், ‘ஃபை.. ஃபை.. கலாச்சிஃபை’ என்ற பாடலைத் தொடர்ந்து இப்படத்திலும், “போகாதே.. போகாதே” என்ற பாடலைப் பாடியுள்ளார் ரம்யா நம்பீசன். ப்ரொக்ளைம் நிறுவனத்தில் சில விளம்பரப் படங்களை எடுத்தவரான சீனு ராமசாமி, “செல்வி ரம்யா நம்பீசன் பாடிய ஃபை.. ஃபை பாடலை எங்க வீட்டுக் குழந்தைங்கலாம் பாடிட்டிருக்கு. அந்தப் பாட்டு போல, இந்தப் படத்தில் அவங்க பாடிய பாடலும் வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்.

ஓர் ஆங்கில வார்த்தைக்கூட கலக்காமல், “சகா.. சகா..” என்றொரு பார்ட்டி சாங்கைஆன்றியாவும் நவீனும் பாடியுள்ளனர். படத்தின் தீம் பாடலை உஷா உதூப் பாடியுள்ளார். ‘நான் சின்ன வயசில் இருந்த பொழுதே உஷா உதூப்க்கு நான் ரசிகன் சொன்னா.. அது கடவுளோட கிஃப்ட். இன்னும் அவங்க குரலும் மாறலை, உருவமும் மாறலை. பொதுவாக கலைஞர்கள் சாகாவரம் பெற்றவர்கள். உலகம் அழியும்வரை அவங்க பெயரும் புகழும் நிலைச்சி நிற்கும். அந்த அடிப்படையில் இவங்கலாம் பெரிய பொக்கிஷம். இந்தப் படத்திற்கே பெரிய பிளஸ் பாயின்ட்ன்னா.. மத்தவங்க பாடிய சாங் ஹிட்டாகும். இவங்க பாடிய சாங் சூப்பர் ஹிட்டாகும்” என்றார் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார்.

“வைபவை நான் ‘சென்னை 28’ படத்திலேயே அறிமுகம் பண்ணலாம்னு நினைச்சேன். இவருடைய ரோலைதான் ஜெய்க்கு கொடுத்தேன். தமனோட மியூசிக்ல மாஸ் தெரிகிறது. ஒருவேளை ஆந்திரா பக்கம் ஒதுங்கினதால அப்படியாகிடுச்சு போல! ‘குள்ளநரி கூட்டம்’ படத்திலிருந்தே நான் ரம்யா நம்பீசனோட பெரிய ஃபேன். இந்தப் படம் வெற்றி பெற விஷஸ். வாழ்த்துகள். நான் உஷா உதூப மேடம்கூட ஒரு பாடல் பாடியிருக்கேன். அஞ்சலி படத்தில், ‘வேகம் வேகம் போகும்’ என்ற பாடலில்.. நான், யுவன், ப்ரேம்ஜிலாம் கோரஸ் பாடியிருக்கோம்” என்றார் வெங்கட் பிரபு.