Shadow

ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்: அழித்தொழிவின் காலம்

Transformers உருமாறிகள்

ட்ரான்ஸ்ஃபார்மர்சின் நான்காவாது பாகம் ஜூன் 27 அன்று வெளிவரவுள்ளது. ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் மூன்று பாகங்களையும் இயக்கிய மேக்கேல் பே தான் இப்படத்தையும் இயக்குகிறார். படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரக்காக உருமாறும் தலைவன் ஆப்டிமஸ் ப்ரைம், செவர்லே காராக மாறும் பம்பிள்பீ, ஹம்மர் H2வாக மாறும் மெடிக்கல் ஆஃபீசர் ராட்சட், தேனீயாக இருந்து லெனோவோ திங்க் பேடாக மாறும் ஆட்டோ பாட் ப்ரெய்ன்ஸ் முதலிய ட்ரான்ஸ்ஃபார்மர்களுடன் (உருமாறிகள்) மார்க் வால்பெர்க், ஜாக் ரெனார், நிக்கோலா பெல்ட்ஸ், ஸ்டான்லி டுச்சி முதலியோர் நடிக்கின்றனர்.

இந்தப் பாகத்தில், முதன்முறையாக டைனோபாட்ஸை அறிமுகப்படுத்துகின்றனர். இவை டைனோசராக உருமாறும் ட்ரான்ஸ்ஃபார்மர்கள். ஆப்டிமாஸ் ப்ரைமின் தலைமையில் அச்சுறுத்தும் சவாலுக்கு மனிதர்களுடன் இணைந்து தயாராகின்றனர் ஆட்டோ பாட்ஸ். தீமைக்கும் நன்மைக்குமான நம்ப முடியாத போரைக் காணத் தயாராகுங்கள்.