Shadow

தமிழர் உணர்வை மதிப்போம் – விஜய் டி.வி.

Vijay TV

தமிழர்களின் உணர்வுகளை மதிப்பதிலும் தமிழ் மண்ணின் மாண்பை நிலை நிறுத்துவதிலும் என்றென்றைக்கும் உறுதியான நிலைப்பாடுகளுடனே இருந்திருக்கிறது விஜய் டிவி. இனிமேலும் இருக்கும்.

உலக அளவில் தமிழர்களின் பெருமையையும் திறமையையும் முன்னிறுத்துவதை தன் முதல்கடமையாக வைத்திருக்கிறது. இதனாலயே விஜய் டிவியின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் உலக தமிழர்களின் அன்பும் ஆதரவும் பெருகிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி குழுமம் பற்றி வருகிற உண்மைக்கு புறம்பான சில செய்திகளுக்கு விளக்கம் அளிக்க விரும்புகிறோம்.

மார்ச் 1, 2 தேதிகளில் இலங்கையில் நடக்கிற கலைநிகழ்ச்சிக்கும் விஜய் தொலைக்காட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது மட்டும் அல்ல இதற்கு முன் விஜய் டிவி இலங்கையில் எந்த ஒரு கலை நிகழ்ச்சியும் நடத்தியது இல்லை. விஜய் டிவி குறித்து இது போன்று வரும் செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை.

விஜய் டிவி எப்போதும் தமிழர்களின் மன உணர்வுகளை புரிந்து கொண்டு பொறுப்புடன் செயல்பட்டு வந்திருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

– விஜய் டி.வி.