சிபிராஜ், பிந்துமாதவி, சத்யராஜ், கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர் தமிழின் முதல் பீரியட் படமான ஜாக்சன் துரையில் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் முக்கிய வேடத்தில் தமிழில் முதன்முறையாக ஹாலிவுட் நடிகர் ஜக்கேரி அறிமுகமாகிறார்.
அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகவுள்ள இப்படத்தை ஸ்ரீ க்ரீன் புரொடக்ஷன்ஸ், எம்.எஸ்.சரவணன் இன்று துவக்கினார்.
ஹாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற காஞ்சுரிங் (CONJURING) படத்தின் ஒப்பனைத் தொழில்நுட்பம் இப்படத்தில் பயன்படுத்தபடுகிறது.
தரணிதரன் இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ஒளிப்பதிவு யுவராஜ், இசை சித்தார்த் விபின், படத்தொகுப்பை இந்த ஆண்டின் தேசிய விருது பெற்ற விவேக் ஹர்ஷன் கவனித்துக் கொள்கிறார். கலை T.N. கபிலன், நிர்வாகத் தயாரிப்பாளர் அருண் புருசோத்தமன், T. ரகுநாதன், தயாரிப்புக் கட்டுப்பாடு M.பூமதி, லைன் ப்ரொட்யூஸர் செல்வா, தயாரிப்பு மேலாளர் C.பாலமுருகன், மக்கள் தொடர்பாளர் நிகில், மற்றும் இவர்களுடன் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.
இப்படத்தின் கதை, திரைக்கதை 1940 – இல் நடப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளதால் மிகுந்த பொருட்செலவில் மிகப் பிரம்மாண்டமாக அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெறுகிறது.
திகிலும், நகைச்சுவையும் கலந்த பிரம்மாண்ட படமாக ஜாக்சன் துரை உருவாகிறது.