குஜராத் முதலமைச்சரும் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளருமான திரு.நரேந்திர மோடியின் இளமைப்பருவம் முதல் அவரது தலைமையின் கீழ் குஜராத் மாநிலம் கண்டிருக்கும் பல்துறை வளர்ச்சிகள் வரை விவரிக்கும் “நரேந்திர மோடி – நேர்மையும் நிர்வாகத் திறமையும்” என்ற புத்தகத்தை பத்திரிகையாளர் எஸ்.சந்திர மெளலி எழுதியிருக்கிறார். ஏராளமான அரிய புகைப்படங்களும், நேரடித் தகவல்களும் கொண்ட புத்தகத்தை நூற்றாண்டு கண்ட அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
திரு.நரேந்திர மோடி சென்னை வந்திருந்தபோது அந்தப் புத்தகத்தை வெளியிட, தமிழக பா.ஜ.க. தலைவர் திரு. பொன் ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. அகில இந்திய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.