
பேய்கள் ஜாக்கிரதை என்ற தலைப்பில் ஒரு படம் வரப் போகின்றது. அதில் ஜீவரத்னம் கதாநாயகனாகவும், ஈஷான்யா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.
இவ்வுலகில் பேய்கள் இருக்கிறது என்று நம்பும் ஒரு கதாபாத்திரமும், பேய்கள் உள்ளது என்று கூறுபவன் மூடனெனக் கூறும் ஒரு கதாப்பாத்திரமும் ஒரு கட்டத்தில் சந்திக்க நேர்கிறது. இவ்விருவரையும் இணைக்கும் வண்ணம் ஒரு சம்பவம் நடைபெறுகிறது. அந்த சம்பவம் எதனால் நடைபெறுகிறது? சம்பவத்திற்கு பின் அவர்கள் படும் குழப்பங்களை நகைச்சுவைப் பிண்ணனியுடன் கலந்து கூறியிருக்கும் படமே “பேய்கள் ஜாக்கிரதை”
இயக்குநர் சரண் இயக்கத்தில் வெளிவந்த பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, ஜே.ஜே போன்ற வெற்றிபடங்களில் இணை இயக்குனராகவும், தெலுங்கு படவுலகில் நா ஊப்பிரி, கால் செண்டர், சீனோடு மற்றும் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற “பீருவா” உள்ளிட்ட பல படங்களை இயக்கிய கண்மணி முதன்முறையாக இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமாகிறார்.
ஸ்ரீ சாய் சர்வேஷ் எண்டர்டைன்மெண்ட் சார்பாக ஜி.ராகவன் அவர்கள் இப்படத்தை தயாரிக்கின்றார். இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெறுகிறது.