Shadow

‘தல’ ஹீரோயின் நயன்தாரா

Nayan

சூப்பர்ஹிட் ஹிந்திப் படமான ‘கஹானி’ தமிழில் ‘நீ எங்கே என் என்பே’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘அனாமிகா’ என்ற பெயரிலும் இயக்கி வருகிறார் இயக்குநர் சேகர் கம்முலா. படத்தினை அப்படியே தழுவாமல் தனது பாணியில் திரைக்கதையை மாற்றி அமைத்திருக்கிறார். உதாரணத்திற்கு வித்யா பாலன் ஹிந்திப் படத்தில் கர்ப்பிணியாக நடித்திருப்பார். சேகர் கம்முலாவின் படத்தில் நயன்தாரா படத்தில் கர்ப்பவதி இல்லை. படத்தைப் பற்றி, ‘கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படும் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைப்பது வாழ்நாளில் ஒருமுறை நிகழும் அதிசயம். இயக்குநரின் எதிர்பார்க்கும் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துவிட்டேன் என்ற நிறைவு எனக்குள்ளது. கண்டிப்பாக ரசிகர்களும் அதை உணர்ந்துபோற்றுவார்கள்’ என்று சொல்லியுள்ளார் நயன்தாரா.

இயக்குநர் சேகர் கம்முலாவும், இசையமைப்பாளர் கீரவாணியும்  கலந்து கொண்ட பிரஸ் மீட் சென்னையில் நடந்தது. சேகர் கம்முலாவின் சூப்பர் ஹிட் படமான லீடரை தமிழில் ரீமேக் செய்யும் பொழுது ரஜினி நடித்தால் நன்றாகயிருக்கும் என்ற கருத்தினை முன்பொருமுறை தெரிவித்திருந்தார். அதைப் பற்றிக் கேட்டதற்கு, “யாருக்குதான் ரஜினி சார் வச்சு படமெடுக்க ஆசையிருக்காது. அவரிடம் போய் பேசலை. ஆனா லீடர் படத்தில் ரஜினி நடித்தால் அதைவிட மகிழ்ச்சி வேறில்லை” என்றார்.

Keeravaani

தெலுங்கில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி. இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். தமிழில் கூட “மரகதமணி” என்ற பெயரில் அழகன், நீ பாதி நான் பாதி, வானமே எல்லை, ஜாதிமல்லி என கே.பாலச்சந்தரின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அத்தனை பாடல்களுமே ஹிட். 1997ஆம் ஆண்டு வெளிவந்த ‘அன்னமயா’ படத்திற்காக தேசிய விருது பெற்றார். 8 முறை ஆந்திர அரசின் நந்தி விருதையும், 5 முறை பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார். 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதியோடு ஓய்வு பெறப் போகிறேன் எனத் தெரிவித்துள்ளார். அதைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நீங்களாகப் போகச் சொல்லும் முன் நானாகப் போயிடணும். அதுதான் மரியாதை” என பதிலுரைத்தார் கீரவாணி.

Vaibhav“இவ்வளவு பெரிய டீம் கூட நடிக்க வாய்ப்பு கிடைச்சதே பெரிய விஷயம். கூப்பிட்டாங்க. போனேன். ஹீரோயின் யார் சார்னு கேட்டேன். நயன்தாரா மேடம்னு சொன்னாங்க. ஐ.. நம்ம தல ஹீரோயின்னு செம ஜாலியாயிடுச்சு” என்றார் வைபவ்.

நடிகர்கள்:

>> நயன்தாரா
>> ஹர்ஷவர்தன் ரானே
>> பசுபதி
>> வைபவ் ரெட்டி
>> வினய் வர்மா
>> K.V.ஜெய ஹர்ஷா
>> மாயானந்த் தாகுர்
>> முக்கா நரசிங்க ராவ்
>> மொஹ்சின் ராஜா
>> நரேஷ்
>> டக்குபோத் ரமேஷ்

பணிக்குழு:

>> இயக்கம் – சேகர் கம்முலா
>> இசை – மரகத மணி
>> ஒளிப்பதிவு – விஜய் சி.குமார்
>> படத்தொகுப்பு – K.வெங்கடேஷ்
>> இணை இயக்கம் (தமிழ்) – மகேஷ்
>> கதை, திரைக்கதை – சேகர் கம்முலா, எண்டமூரி வீரேந்திரநாத்
>> வசனம் – பிருந்தா சாரதி, மகேஷ் (தமிழ்)
>> கலை – சின்னா
>> பாடல் – மதன் கார்க்கி