Shadow

திரிசங்கு சொர்க்கத்திலிருந்து மீண்ட ராஜா

Thani Oruvan Thanks Meet

“12 வருடம் திரிசங்கு சொர்க்கத்தில் இருந்தேன். ரீமேக் படம் மட்டுமே எடுக்கிறேன் எனச் சொன்னாங்க. நான் நிஜமாவே படம் எடுக்கிறேனா? நான் இயகுநர்தானா என்றெல்லாம் சந்தேகமாக இருந்தது” என்று மிகவும் கலங்கிப் போயிருந்ததாகச் சொன்னார் மோகன் ராஜா.

“எங்கண்ணனோட திறமை என்னென்னு எங்க குடும்பத்தினருக்கே மட்டுமே தெரிந்த விஷயம் இப்ப அனைவருக்கும் தெரிந்திருக்கு. இந்த வெற்றி எனக்கு ஆச்சரியம் தரலை. அதற்காக அவர் எப்படிலாம் உழைச்சாருன்னு எனக்கு மட்டுந்தான் தெரியும். இந்தக் கதை காம்ப்ளக்ஸ்ன்னா மைன்ட் கேம். நான், எங்கண்ணன் என்பதால் ஒத்துக்கிட்டேன். ஆனா கணேஷ் வெங்கட்ராம், ராகுல், ஹரிஷ் உத்தமன், ஸ்ரீசரண் எல்லாம் எங்கண்ணனை நம்பி வந்தாங்க. இப்ப எங்க குடும்பத்தில் ஒருத்தராகிட்டாங்க.

தம்பி ராமையா சார் கலக்கிட்டார். அவர் நடிச்ச கேரக்டருக்கு ரெஃபரன்ஸே கிடையாது. ஆனா ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கிட்டார். சுரேஷ் சார், பாலா சார் ரொம்ப உதவி பண்ணியிருக்காங்க. ஏன்னா என் அண்ணன் ரொம்ப குழப்பிப்பார். கூட இருந்து எல்லாத்தையும் கோர்வையாக்கிக் கொடுத்திருக்காங்க.

ஆதி. யப்பா.. என்னா லிரிக்ஸ்!? ஹிப்ஹாப் தமிழா கலக்கிட்டார். பாடல் வரிகளில் என்னா மெச்சூரிட்டி. கண்டிப்பா பெரிய பாடலாசிரியர்களுக்கு நிகரா எழுதியிருக்கார்னு தைரியமா சொல்லலாம். ஐ சல்யூட் ப்ரோ” என்றார் ஜெயம் ரவி.

“நான் ஆதி கிட்ட போனதே படம் முடிஞ்சுதான். பெரிய மியூஸிக் டைரக்டர் எல்லாம் இந்தப் படத்துக்கு நோ சொல்லிட்டாங்க. ஆதிக்கு படம் போட்டுக் காட்டினேன். படம் பார்த்துட்டு, ‘என்ன ப்ரோ இது? அசத்திட்டீங்க. வேற ரேஞ்ச்ல இருக்கு’ என்றார். நான் எதிர்பார்த்ததை விடவே ரொம்ப நல்லா பண்ணியிருக்கார்” என்றார் மோகன் ராஜா. ரீமேக் இல்லாமல், தன்னை நம்பி நேரடி படம் பண்ணச் சொன்ன ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் கல்பாத்து S. அகோரம் அவர்களுக்கும் நன்றி சொன்னார் திரிசங்கு சொர்க்கத்திலிருந்து மீண்ட மோகன் ராஜா.