Shadow

தி எக்ஸ்பேண்டபிள்ஸ் 3 – இந்தியப் பாடல்

வட இந்திய இசைக்குழுவான ;ஃபரித்கோட் (Faridkot)’ எக்ஸ்பேண்டபிள்ஸ்–3 பட பிரமோஷனுக்காக பாடலை உருவாக்கியுள்ளனர். சில்வஸ்டர் ஸ்டலோனின் எக்ஸ்பேண்டபிள்ஸ் படம் உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்ற ஆக்ஷன் படத்தொடர். இந்திய ரசிகர்களை இன்னும் வலுவாகக் கவர, PVR பிக்சர்ஸ் மற்றும் MVP எண்டர்டெயின்மென்ட் (இந்தியா) உடன் இணைந்து ஆர்டிஸ்ட் அலெள்ட் (ArtistAloud) இணையத்தில் ஒரு போட்டியை வெளியிட்டு இருந்தனர்.

போட்டிக்கு வந்த ஆயிரக்கணக்கான இசைகளில் இருந்து 15 –ஐ மட்டும் இறுதிக் கட்டத்திற்கு தேர்வு செய்தனர். அதில் அனைவரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஃபரித்கோட் இசைக்குழுவின் “மஸ்தானே” எனும் பாடல் போட்டியில் வென்றது. இப்பாடல், குழப்பமான பாப் ரகத்தைச் சேர்ந்தது என இணையத்திலும் திரையரங்கிலும் வெளிவரயிருக்கும் பிரத்தியேக் ட்ரெயிலருடன் இணைந்து இப்பாடல் ஒலிபரப்பப்படும்.

Faridkot

இந்த இசைக்குழுதான், V சேனலின் லான்ச் பேட் 3 நிகழ்ச்சியில் வென்றது. அந்தக் குழுவினைச் சேர்ந்த IP சிங், “இது எங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு. எக்ஸ்பேண்டபிள்ஸ் படத்திற்கான ஆஃபிசியல் இந்தியப் பாடலை உருவாக்கக் கிடைத்த மிகப் பெரும் விஷயம். இந்த ஆக்ஷன் படத்திற்கான வேகம் எங்க பாடலில் வேணும்னு தெரியும். பெரிய டிரம்ஸ், கிட்டார்ஸ் என உபயோகப்படுத்தி இருந்தாலும், எங்களுக்கிருந்த பெரிய சவால் எக்ஸ்பேண்டபிள்ஸ்கான பெரும் எதிர்பார்ப்பில் இருந்து விலகாமல் இருப்பதுதான். நாங்கள் முன் வைத்த ஐடியாவை ஒத்துக் கொண்டதற்கு, எக்ஸ்பேண்டபிள்ஸ் குழுவுக்கு நன்றி” என்றார்.