விளம்பரங்களுக்குப் பணம் இல்லாமையாலும், பெரிய பேனர்களின் விளம்பரங்களுடன் போட்டியிட முடியாததாலும், இயக்குநர் மிஷ்கின் சாலையில் இறங்கி படத்தின் போஸ்டரை அவரே ஒட்டி வருகிறார்.
“தோள் கொடுத்த ஊடக நண்பர்களுக்கும்,
இதயம் கொடுத்த பார்வையாளர்களுக்கும்,
கை கொடுத்த விநியோகிஸ்தர்களுக்கும்,
தியேட்டர் உரிமையாளர்களுக்கும் நன்றி”
என அப்போஸ்டரில் உள்ளது.
நேற்றிரவு கோவையில் விடியற்காலை 03:00 மணிக்கு படத்தின் போஸ்டரை ஒட்டினார். மேலும் அவரது பயணம் மதுரை, திருச்சி, செலம் என பல ஊர்களுக்கும் தொடரும்.
இந்தப் பயணத்தில், அவரது படம் வெளியிடப்பட்டிருக்கும் திரையரங்கிற்குச் சென்று, இசை ஆர்வலர்களுக்கு படத்தின் ஒரிஜினல் முன்னணி இசை ஆடியோ சிடியை அளித்தும் வருகிறார். ஒவ்வொரு சிடிக்கும், சென்னையிலுள்ள ‘வசந்தம்’ பள்ளிக்காக நன்கொடையும் பெற்றுக் கொள்கிறார். அப்பள்ளி மனநலம் குன்றியக் குழந்தைகளுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.