இந்த மாதம் 22 ஆம் தேதி துவங்க உள்ள த்ரிஷா இல்லன்னா நயன்தாரா எனும் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக கயல் படத்தின் ஆனந்தியும் நடிக்கவுள்ளனர்.
டமால் டுமீல் படத்தைத் தயாரித்த கேமியோ ஃபிலிம்ஸ் (Cameo Films) நிறுவனம் சார்பில் சி.ஜே.ஜெயக்குமார், தங்களது நிறுவனத்தின் இரண்டாவது படமான ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தை எளிமையான பூஜையுடன் துவக்கினர். பல்வேறு இயக்குநர்களிடம் இணை இயக்குநராகப் பணி புரிந்த ஆதிக் ரவிsசந்திரன் இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
பல்வேறு விளம்பரப் படங்களைத் தயாரித்த ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தின் தயாரிப்பாளர் ஜெயக்குமார் கூறும்போது, “இந்தக் கதையை நான் கேட்கும் போதே இந்தப் படம் ரசிகர்கள் இடையே எவ்வளவு வரவேற்பு பெறும் என்பதை நிர்மாணித்துக் கொண்டேன். இப்போதைய தமிழ் சினிமாவில் ஜி.வி. பிரகாஷ் குமார் அளவுக்கு இந்தப் பாத்திரத்துக்கு வேறு யாரும் பொருந்தி இருப்பார்களோ தெரியாது. கதாநாயகனாக அவரது முதல் படமான ‘டார்லிங்’ வெற்றி பெற்றது எங்களுக்கு கூடுதல் பலமாகும். ‘கயல்’ மூலமாக ஆனந்தி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இந்தப் படத்தில் அவரையே நாயகியாக ஒப்பந்தம் செய்தோம். இந்தப் படம் அவரை முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தில் காட்டும். குறுகிய காலத் தயாரிப்பான ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ இளைஞர்களைக் கவரும் படம் என்பதில் சந்தேகம் இல்லை” என்றார்.
பணிக்குழு:
>> தயாரிப்பாளர் – சி.ஜே.ஜெயக்குமார்
>> இயக்குநர் – ஆதிக் ரவிச்சந்திரன்
>> ஒளிப்பதிவாளர் – ரிச்சர்ட் எம். நாதன்
>> இசையமைப்பாளர் – ஜி.வி. பிரகாஷ் குமார்
>> படத்தொகுப்பாளர் – ரூபன்
>> கலை – உமேஷ் குமார்
>> நிர்வாகத் தயாரிப்பு – என். சுப்பு
>> இணை தயாரிப்பு – எஸ். சக்திவேல்
>> ஸ்டில்ஸ் – பாஸ்கர்
>> நடனம் – ஷெரிஃப்
>> சண்டை – ஹரி தினேஷ்
>> டிசைனர் – E M & C
>> உடை வடிவமைப்பாளர் – நிரஞ்சனி அகத்தியன்
>> காஸ்ட்யூமர் – சீனு
>> ஒப்பனை – குப்புசாமி
>> மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா