Shadow

நடன இயக்குநரின் யாளி

ஏ.பி. க்ரியேஷன்ஸ் (A.B Creations) சார்பில் நடிகை அக்ஷயா தயாரிக்கும் முதல் தமிழ்ப்படம் ‘யாளி’. கதையும் அவருடையதே! அக் ஷயா ஏற்கனவே “கலாபக் காதலன்”, “உளியின் ஓசை” போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அக்ஷயாவின் கதைக்கு, ‘காதல் கந்தாஸ்’ திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இவர் காதல், வெயில், அங்காடித் தெரு, எம் மகன், நான் மகான் அல்ல, டார்லிங் போன்ற படங்களுக்கு நடன இயக்குநராக பணி புரிந்தவர்.

கந்தாஸ் ஏற்கனவே “நீ நாதே நா” என்ற நேரடி கன்னட வெற்றிப் படத்தை இயக்கிவர். யாளி, இவருக்குத் தமிழில் முதல் திரைப்படம். இது காதல், காமெடி கலந்த த்ரில்லர் படமாம். இதில் தமன், அக்ஷயா, அர்ஜுன், மனோபாலா, ஊர்வசி ஆகியோர் நடிக்கின்றனர். முழுத் திரைப்படமும் மலேசியா நாட்டில் பினாங்கு, மலாக்கா, லங்காவி, டாப்பிங், ஜெண்டிங் மற்றும் கோலாலம்பூர் பகுதிகளில் மிகப் பிரம்மாண்டமாக படப்பிடிப்பு நடத்தவுள்ளனர். 

இசையமைப்பாளராக திரு. S. மோகன் ராம் அறிமுகப்படுத்தப்படுகிறார். பாடல்கள் பதிவு மலேசியாவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. “நீ நாதே நா” கன்னடப் படத்தின் ஒளிப்பதிவாளரே, இப்படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

>> பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து
>> படத்தொகுப்பு – சந்திரகுமார்
>> தயாரிப்பு மேற்பார்வை – J. பிரபாகர்
>> நிர்வாகத் தயாரிப்பு – கவிதாவாணி லட்சுமி
>> கலை – மோகன மகேந்திரன்
>> மக்கள் தொடர்பு – நிகில்

2015 ஜூன் 27 முதல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படுகிறது.