Shadow

நண்பேன்டா ரஜினி!!

Jayapradha son சித்து

‘நினைத்தாலே இனிக்கும்’ உட்பட பல படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை ஜெயப்ரதா. இவர்களின் நட்பு இன்றளவும் தொடர்ந்து வருவது உலகமறிந்ததே!

மேலும் லிங்கா படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்த பல படங்களிலும் ஜெயப்பிரதா நடித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு, ஜெயப்பிரதா அவர்கள் ரஜினிகாந்தை நட்பு ரீதியாக லிங்கா படப்பிடிப்பின்போது சந்தித்துள்ளார். அப்போதுதான் தயாரித்துக் கொண்டிருக்கும் உயிரே.. உயிரே.. படத்தின் முன்னோட்டத்தைக் காண்பித்துள்ளார். படத்தை வெகுவாகப் பாரட்டிய சூப்பர் ஸ்டார் ‘உயிரே.. உயிரே..’ படத்தின் முன்னோட்டத்தை தன் படம் லிங்கா வெளியாகும் திரையரங்குகளில் இணைக்குமாறு தயாரிப்பு தரப்பிடம் கேட்டுள்ளார்.

Nanbenda Rajiniசூப்பர் ஸ்டாரின் பெருந்தன்மையைக் கண்டு பெருமகிழ்ச்சியுற்ற நடிகை ஜெயப்ரதா தனது நன்றியைத் தெரிவித்தார். ஏனெனில் அப்படத்தில் அவரின் மகன் சித்து கதாநாயகனாக நடிக்கிறார்.

ஹன்சிகா மோத்வாணி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். A.R. ராஜசேகர் இப்படத்தை இயக்குகிறார்.

ஹேப்பி பர்த்டே தலைவா!!