“நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும், ஒரு சிறந்த பயணமாகவும் அனைத்தையும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பாகவும் அமைந்தது. இப்படத்தில் நான் ஒரு ஸ்கூல் டீச்சராக வருகிறேன். ‘குள்ளநரி கூட்டம்’ திரைப்படத்துக்கு பிறகு நான் ஒரு கிராமத்துச் சாயலில் ஒரு கதாபாத்திரம். நான் இவ்வகையான நகைச்சுவைத் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என நெடு நாளாய்க் காத்திருந்தேன். இயக்குநர் ஸ்ரீகிருஷ்ணா இந்தக் கதையைக் கூறும்பொழுதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சற்றும் யோசிக்காமல் நான் நடிக்க ஒப்புக் கொண்டேன்” என்றார் ரம்யா நம்பீசன்.
படம் முடியும் தருவாயில் உள்ளது. “இன்னமும் எனக்கு தமிழில் உச்சரிப்புகள் சற்று தடுமாற்றமே அத்தகைய நேரங்களில் பேருதவி புரிந்துள்ளார் அருள்நிதி. இந்தப் படம் கண்டிப்பாக குழந்தைகளுக்குப் பிடிக்கும்” என்றார் ரம்யா.