
2013 ஆம் ஆண்டின் மிகப் பெரிய தமிழ்த்திரையுலக கண்டுபிடிப்பு நஸ்ரியாதான். இளமை கொஞ்சும் குறும்புடன் அறிமுகமாகி உடன் நடிக்கும் நடிகர்களிடம் இப்படி ஒரு திறமை பார்த்ததில்லை என ப் பாராட்டப்படும் நஸ்ரியாவுக்கு நேற்று பிறந்த நாள்.
“நடிகையாக இது என்னுடைய முதல் பிறந்த நாள். இத்துடன் என்னுடைய முதற்படமும் என்னுடைய மிக முக்கியப் படமுமான ‘திருமணம் எனும் நிக்காஹ்‘ திரையிடப்பட தயாராக இருக்கிறது. இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் பிரியா. என் இயல்பான சுபாவத்தை பிரதிபலிக்கும் கதாபாத்திரம் இது. படப்பிடிப்பின் ஒவ்வொரு தருணத்திலும் என் பாத்திரத்தை ரசித்து நடித்தேன். இந்த இனிய பிறந்த நாளில் எனக்கு ஊக்கமும், ஆதரவும் தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி” என்றார்.