
“முதல்நாள் நானு, சித்தார்த், ப்ரித்வி ராஜ்லாம் நின்னு பேசிட்டிருக்கோம். வசந்தபாலனுக்கு ஒரே டென்ஷன். ‘என்ன சார் எப்ப பார்த்தாலும் பேசிட்டே இருக்கீங்க. எனக்கு புது நடிகர்களை வச்சு படமெடுத்ட்ஹே பழக்கமாயிடுச்சு. அவங்க சொல்றதுக்கெல்லாம் கேட்பாங்க. நீங்க ஒண்ணுமே கேட்க மாட்டுறீங்களே!?’ எனக் கேட்டார்.
என்னடா இவர் இப்படிச் சொல்றார்னு, ‘என்ன சித்தார்த்.. நாம படத்தைப் பற்றித் தான பேசிட்டிருந்தோம்?’னு கேட்டேன். சித்தார்த், ‘இல்ல சார் நாம் ப்ரூவ் பண்ணணும்’ என்றார். நானும், பிரித்வியும் ஏறக்குறைய சதித்திட்டம் தீட்டுற மாதிரிதான் தீட்டணும். நான் சித்தார்த் ப்ரித்வி மூவரும் பிளான் பண்ணோம். சதித்திட்டமே கூடச் சொல்லலாம். எங்க சதித் திட்டம் மிகப் பெரிய வெற்றியைத் தந்திருக்கு” என ‘காவியத்தலைவன்’ படம் நிறைவாக வந்திருக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் நாசர்.
இந்தப் படத்தில் எனக்கு வேலையே இல்லாமப் போயிடுச்சு. ஷாட்டை டிஸ்க்ரைப் பண்ணிட்டு, அவங்க கையில் பேப்பர் கொடுத்துட்டால் போதும். நாசர் சார், சித்தார்த் சார், ப்ரித்விராஜ் சார், தம்பி ராமைய்யா அண்ணன், பொன்வண்ணன் சார் என அனைவரும் ஒருத்தர் டையலாக்கை ஒருத்தர் மாத்தி பேசிப்பாங்க. அது நாடகத்திற்கான பிராக்டீஸ் மாதிரி இருக்கும். பிராக்டீஸ் பண்ணிட்டு, ‘ரெடி பாலன் சார்’னு சொல்வாங்க. நான் மேஜிக் பார்க்க கூலாக மானிட்டர் முன்னாடி நிற்பேன்.
நான் நாசர் சார்கிட்ட சொல்வேன். ‘உங்களை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது’ என. ஆனா நிஜ சங்கரதாஸ் சுவாமிகளை மாதிரியே கண் முன்னாடி வாழ்ந்து காட்டியிருக்கார்” என்றார் வசந்தபாலன்.