Shadow

நானி – வாணியின் ‘ஆஹா கல்யாணம்’

Nani - Vaani

யஷ் ராஜ் ஃப்லிம்ஸ் இந்தியத்  திரையுலகில் தங்களுக்கென ஒரு பிரத்தியேக இடத்தை தரமான படங்கள் மூலம் நிர்மாணித்து கொண்டவர்கள். சர்வதேச அளவில் பெரும் வரவேற்பு கொண்டுள்ள யஷ் ராஜ் நிறுவனம் முதல் முறையாக தமிழில் ‘ஆஹா கல்யாணம்‘ மூலம் தடம் பதிக்க உள்ளனர். ஹிந்தியில் பெரும் வெற்றி பெற்ற ‘பேண்ட் பஜா பராத்’ படத்தைத் தமிழில் தயாரித்து உள்ளனர். சடங்கு, சம்பிரதாயம் உள்ளிட்ட ஆடம்பரத் திருமணங்களைப் பற்றியும், அந்தத் திருமணத்தை நடத்தும் நிறுவனங்கள் பற்றியும், இசை கலந்த  காதல் உணர்வோடு கலவையாகத்  தயாரிக்கப்படும் படம் தான் ‘ ஆஹா கல்யாணம்’.   நான் ஈ  படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நானி, துடிப்புள்ள  நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக மும்பையிலிருந்து  வரும் மற்றொரு இளம் நாயகி வாணி குப்தா  நாயகியாக நடிக்கிறார் . அழகுப்புயலாக வளம் வரும் வாணி, நானியுடன்  இனிப்பும் காரமும் கலந்த ஒரு நட்புறவைப் பிரதிபலிக்கிறார்.

இயக்குநர் விஷ்ணுவர்தனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய கோகுல் இயக்குகிறார்.  தமிழில் வெளியாகும் தூம் 3 திரைப்படத்துடன் ‘ ஆஹா கல்யாணம் ‘ திரைப்படத்தின் ட்ரெயிலர்  வெளியிடப்படுகிறது.ஒளிப்பதிவாளர் லோகநாதனின் கண்கவரும் ஒளிப்பதிவில், தரனின் மெய் மறக்கச் செய்யும் இசையில் உருவான பாடல்கள்  செவிக்கு விருந்தாக அமையும்.  அறிமுகப் படமாக (first look) வெளிவரும் இந்தப் புகைப்படமே ‘ஆஹா கல்யாணம்’  திரைப்படம் எந்த அளவுக்கு மக்கள்  மனதை கவரும் என்பதற்கு அத்தாட்சி.

பணிக்குழு:

>> இயக்கம் – ஏ.கோகுல் கிருஷ்ணா
>> தயாரிப்பு – ஆதித்யா சோப்ரா
>> க்ரியேட்டிவ் தயாரிப்பு – வேணுபாதம் குமார்
>> இசை – தரன் குமார்
>> ஒளிப்பதிவு – லோகநாதன் ஸ்ரீநிவாசன்
>> கதை – மனீஷ் ஷர்மா
>> திரைக்கதை – ஹபீப் ஃபைசல்
>> வசனம் – ராஜிவ் ராஜாராமன்
>> அசோசியேட் தயாரிப்பு – ஆஷிஷ் சிங்
>> பாடல் வரிகள் – மதன் கார்க்கி, தாமரை
>> நடனம் – ஜி.பிருந்தா
>> படத்தொகுப்பு பவன் ஸ்ரீகுமார்
>> தயாரிப்பு டிசைன் – ஆர்.சி.வேலு
>> தயாரிப்பு எக்சிக்யூட்டிவ் – விஜய் அமிர்தராஜ்.

Leave a Reply