Shadow

பக்கோடா

வணக்கம்,

IMG_20181101_141741 IMG_20181102_133623

 

தீபாவளி வந்தாச்சு, பருவ மழையும் வந்தாச்சு… அப்படியே மழை பெய்யறப்போ, மொறு மொறுன்னு கொஞ்சம் காரமா பக்கோடாவும், டீயும் குடிச்சா.. எப்படி இருக்கும்…? இதோ செய்திடலாமே, ரொம்ப ஈஸியா….

 

தேவையான பொருட்கள்:

IMG_20181101_141809

அரிசி மாவு- 1 படி

பொட்டுகடலை மாவு -1 படி

இஞ்சி -கையளவு

பச்சைமிளகாய் – 15

பூண்டு -2 கட்டி

சின்ன வெங்காயம் -1/4 கிலோ

உப்பு -தேவைக்கேற்ப

கறிவேப்பிலை -1 கட்டு

 

செய்முறை:

Step 1:

IMG_20181101_141840 IMG_20181101_141648 IMG_20181101_141741

இஞ்சி,பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் இதை எல்லார்தையும், நல்லா தட்டி எடுத்துக்கோங்க. மிக்சியில் அரைச்சுடாதீங்க.. டேஸ்டே போயிரும்.. தட்டி எடுத்தால்தான் சுவையும் மணமும் கூடும்.

step 2:

IMG_20181101_141959 IMG_20181101_142013

அரிசி மாவு, பொட்டுகடலை மாவு, தட்டி வச்சது, உப்பு எல்லார்த்தையும் போட்டு நல்லா கலக்குங்க. கொஞ்சம் கொஞ்சமா தண்ணீர் தெளிச்சு கலக்குங்க.

step 3:

IMG_20181101_142153

வர மாவு.இருக்க கூடாதுங்க, ரொம்ப தண்ணியும் விட்றகூடாது. தண்ணி இருந்தும் இல்லாமலும் இருக்கறாப்ல, இருக்கனும்.. கிள்ளி போட்டா உதிரியா வரணும்.

step 4:

IMG_20181101_142223

இப்போ, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இந்த மாவை கொஞ்சம் கொஞ்சமா.. தேய்த்த வாக்கில் கிள்ளி போடவும்… நல்லா வேக விட்டு, முறுகலா எடுக்கவும்..

IMG_20181102_133623

அவ்வளவுதாங்க… ரொம்ப ஈஸியா. செஞ்சர்லாம்…காற்றுபோகாதமாதிரி அடைச்சு வச்சா, 1 மாசத்துக்கு வச்சிருந்தாலும், நல்லா இருக்கும்…

 

 

– வசந்தி ராஜசேகரன்