குடையுமாம் காக்கி காவாக்கள் – அதனையும்
குமையச் செய்யும் மாநரகப் பேரோட்டிகள்
பால் ஊத்தும் தண்ணீர் லாரிகள்
கிறீச்சிட்டு வழுக்கும் வழுக்கை பணக்கார்கள்
மிதிவண்டி பிளவில் சர்க்கஸ் புரியும்
பிள்ளைபொதி சுமக்கும் மூனுசக்கர ஆனைகள்
விர்ரூமென சீறும் ரெண்டுகால் சாத்தான்கள்
நாற்சந்தி கருஞ்சாலை கொண்டவெண் பட்டைமீது
நேற்று கடந்தவனின் கறை படிந்த
சொச்சங்களின் மீதேறிய சக்கர தடங்களென
பச்சொளி கண்டும் ஓசோனைத் துளையிடும்
புகைசூழ் வாகண அணிவகுப்பை நோக்குங்கால்
நமனை நினையாமல் நடுக்க மின்றி
கடக்கும் நாளும் எந்நாளோ?
(இது ‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு” நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது)
– தினேஷ் ராம்