Shadow

“பரீட்சைக்கு நேரமாச்சு” – ‘ஜிகர்தண்டா’ லட்சுமி மேனன்

Jigarthanda Lakshmi Menon

“எனக்கு படத்தில் கொஞ்ச நாள்தான் ஷூட்டிங் இருந்தது. என்னுடைய ஃபேவரைட் ஹீரோக்களில் சித்தார்த்தும் ஒருவர். அவருக்கு ஹீரோயினாக நடிச்சது ரொம்ப சந்தோஷமாக இருக்கு” என்ற லட்சுமி மேனனுக்கு ஒரு பெரிய வருத்தம்.

பதினோராம் வகுப்பு பரீட்சை தொடங்கியதால்.. ‘ஜிகர்தண்டா’ ஆடியோ லான்ச்க்கு வர முடியாமல் போய்விட்டதென லட்சுமி மேனன் ரொம்பவே ஃபீல் பண்ணார். அதற்கென்னச் செய்ய முடியும்? படிக்கிற பிள்ளைங்களுக்கு சினிமாவால் சோதனைகள் வருவது சகஜம்தானே!

“லட்சுமி மேனன்.. லெவன்த்தான் படிக்கிறாங்க. நான் சொல்றதைப் புரிந்து கொண்டு நடிப்பாங்களான்னு சந்தேகமாகவே இருந்தது. அவங்க மெச்சூரிட்டி லெவல் எப்படியிருக்கணும் நினைச்சுட்டிருந்தேன். ஆனா நாம எதிர்பார்க்கிற எக்ஸ்ஃபிரஷன்ஸை அவங்க முகமும் கண்ணும் கொடுத்துடுது. சித்தார்த்துக்கும், லட்சுமி மேனனுக்கும் எமோஷனல் சீன்ஸ் வரும். பயந்துட்டே இருந்தேன். பார்க்க எனக்கே ரொம்ப பிடிச்சிருந்தது” என்றார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

“எங்க கூட விளையாட்டுத்தனமான ஒரு குழந்தை வேலை செஞ்சிருக்காங்க. பதினொன்னாவதுதான் படிக்கிறேன் என பொதுவில் சொல்லிட்டிருக்கிற லட்சுமி மேனன்தான் அந்தக் குழந்தை. அவங்க நடிக்கிற படம் ஹிட்டாகும்னு சென்ட்டிமென்ட் இருக்கு. அது இந்தப் படத்துலயும் தொடரணும்.

ஆனா எனக்கு ஒரு வருத்தமிருக்கு. லட்சுமி மேனன் படிப்பில் ரொம்ப ‘வீக்’னு நினைக்கிறேன். ரொம்ப வருஷமா பதினொன்னாவது படிக்கிறேன் என்றே சொல்லிட்டிருக்காங்க” என்றார் சித்தார்த்.

அடுத்த நாள் பரீட்சையிருப்பதால் லட்சுமி மேனன் ‘பிரஸ் மீட்’ முடியும் முன்பே கிளம்பி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.