என்னை மறந்து
உயரத்தில் பறந்துக் கொண்டிருக்கிறேன்
எப்படிப் போனேன் தெரியவில்லை
பூமியின்மீது பார்வை படர்ந்திருக்கிறது
எல்லாமே எனக்கு கீழேதான்
நானும் வானத்தோடு சேர்த்து அதிலிருப்பதையும் தவிர
இவ்வளவு சிறியதா இந்தபூமி?
ஏமாந்திருக்கிறேன்.
யாரோ சொல்லிக் கொடுத்ததைக்கேட்டு
சட்டென தெளிகிறேன்
எந்த பறவையின் பார்வையிலிருக்கிறேனோ!!
அதன் இறக்கையின் ஒலிகேட்டு
விழித்துப் பார்க்கிறேன்
வழக்கம் போல கனவுதான்..
விழுந்துவிடவில்லை.
– சே.ராஜப்ரியன்