
நடிகர் உதயாவின் மனைவியும், ‘ரா ரா’ படத்தின் தயாரிப்பாளருமான கீர்த்திகா உதயா, பின்னணிப் பாடகியாகவும், டப்பிங் கலைஞராகவும் பல படங்களில் பணியாற்றி வருகிறார்.
சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘இனம்’ படத்தின் நாயகிக்கு மூன்று மொழிகளில், பின்னணிக் குரல் ¬¬கொடுத்திருக்கிறார் கீர்த்திகா உதயா.
இப்படத்திற்கு முன்னதாக விஜய் இயக்கத்தில் வெளிவந்தா ‘தாண்டவம் படத்திற்காக நடிகை லட்சுமி ராய்க்கும், ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள ‘நான்தாண்டா’ படத்திற்காக நாயகி அனைகாவிற்கும் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.
தற்போது, ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ படத்தின் நாயகி அர்ஷிதாவிற்கும், ‘யாமிருக்க பயமே’ நாயகி ரூபா மஞ்சரிக்கும் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார்.
“ரா ரா, நாந்தாண்டா, இனம்’ ஆகிய படங்களில் பாடல்களைப் பாடியும் இருக்கிறார்.
மாமனார் ஏ.எல்.அழகப்பன் – தயாரிப்பாளர், கணவர் உதயா – நடிகர், மைத்துனர் விஜய் – இயக்குநர் என்ற திரைக்குடும்பத்தில் ஒரு புதிய ‘குயில்’ ஆக இணைந்துள்ளார்.