Shadow

பாண்டி.. மில்க் பாண்டி

Ivanukku Thannila Gandam Audio Launch

கோஸ்ட் கோபல்வர்மாவாக நடித்த ‘நான் கடவுள்’ ராஜேந்திரனின் அடுத்த அவதாரத்தை, ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ படத்தினைக் காணலாம். இரண்டு மணி நேர முழு நீள நகைச்சுவைப் படம். குமரவேல், செண்ட்ராயன், மனோ பாலா, எம்.எஸ்.பாஸ்கர், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், சுப்பு பஞ்சு, “கானா” பாலா என நகைச்சுவைக்கு தீனி போட படத்தில் பலருள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. A7 Band என்ற பெயரில் மூன்று இளைஞர்கள் இணைந்து இசையமைத்து உள்ளனர்.

“எல்லோரும் சொன்னாங்க.. குமரவேல் சார் ராதாமோகன் சார் படத்துலயும், பிரகாஷ்ராஜ் சார் படத்துலயும்தான் நடிப்பார்னு! நானும் அவர்ட்ட கேட்டேன். ‘யோவ்.. யாருய்யா சொன்னது?’ எனக் கேட்டார் அவர்” எனச் சிரித்தார் தீபக்.

“என்னிடம் வசனகர்த்தா கார்த்திக் வந்து கதை சொன்னாப்ல. பாதி கதை கேட்டதும் நடிக்கிறேன் என ஒத்துக்கிட்டேன். மீதி கதையைக் கேட்டதும், நல்ல முடிவுதான் எடுத்திருக்கேன் எனத் தோணுச்சு” என்றார் குமரவேல்.

Ivanukku Thannila Gandam Audio Launchசென்ட்ராயன், “மில்க் பாண்டி.. ஐ ஆம் சேல்ஸ் மேன். ஜாக்கி சேன், வேன் டேம் படங்களில் நடிக்க ஊரைவிட்டு ஓடி வந்த கேரக்டரில் பண்றேன்” என்றவர் ‘மூடர் கூடம்’ போல் தன் கதாபாத்திரம் இப்படத்திலும் பேசப்படும் என நம்பிக்கையாக இருக்கார். ‘மானாட மயிலாட’ புகழ் சாண்டி, ஒரு பாடலுக்கு நடனமியற்றியதுடன் படத்தில் திருப்புமுனை ஏற்படும் ஒரு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

படத்தின் நாயகனான தீபக், “பல வருஷமா என்னைப் பார்ப்பவர்கள் எல்லாம் கேட்டது, ‘நல்லா நடிக்கிறீங்க.. ஏன் சினிமாவுல இன்னும் நடிக்கலை?’ என. அது எனக்கும் தெரிலை. அப்படித்தான் இந்தப் படத்தின் வெங்கட்ராஜும் கேட்டார். ‘தெரில எனக்கு யாரும் வாய்ப்புத் தரலை’ எனச் சொன்னேன். நான் தயாரிக்கிறேன். ஒரு டீம் ஃபார்ம் பண்ணுங்க என்றார். சக்திவேல் சாரும் அப்படித்தான், நிறைய சீரியல்கள் இயக்கி அடுத்து என்னது காத்திருந்தார். இப்ப உள்ள சினிமா ரசனைக்குத் தகுந்தவாறு நாங்க இணைஞ்சு களமிறங்கிட்டோம். இது டூ ஹவர்ஸ் காமெடிப் படமாக இருக்கும்” என்றார்.

மார்ச் 13, ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ படம் வெளியாகயுள்ளது.