நடனம், நடிப்பு, இயக்கத்தினைத் தொடர்ந்து தயாரிப்பிலும் ஈடுபடவுள்ளார் பிரபுதேவா.
“சர்வதேச தரத்தில் கதையம்சம் உள்ள திரைப்படங்களை ‘பிரபு தேவா ஸ்டுடியோஸ்’ தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழி திரைப்படங்களையும் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். தமிழ்த்திரையுலகில் திறமைக்கு பஞ்சமே இல்லை. தேர்ந்த அனுபவமுடைய பலரைக் கொண்டிருக்கிறது. திறன் வாய்ந்த கலைஞர்கள், படைப்பாளிகள் மொழி, பிராந்தியம் என குறுகிய வட்டத்தில் சிக்கிக் கொள்ளக்கூடாது. அவர்கள் நாடெங்கும் சென்று தங்களது திறமையை வெளிக்காட்ட வேண்டும். நல்ல படைப்பாளிகளைத் தேர்ந்தெடுத்து வெவ்வேறு இடங்களுக்கு இட்டுச் செல்வதில் முனைப்பாகச் செயல்படும் ‘பிரபு தேவா ஸ்டுடியோஸ்'” எனக் கூறுகிறார் பன்முகம் கொண்ட பிரபு தேவா.