Search

பிரம்மாண்டமாய் வளர்கிறது “யான்”

Yaan

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்குநராக களமிறங்கும் திரைப்படம்தான் “யான்“. RS infotainment சார்பில் திரு.எல்ரெட் குமார் மற்றும் ஜெயராம் தயாரிப்பில் உருவாகி வரும்  ஜீவா, துளசி, நாசர், ஜெயபிரகாஷ், தம்பி ராமையா, ‘சூது கவ்வும் ‘ கருணா ஆகியோர் நடிக்கின்றனர்.

60% படப்பிடிப்பு இங்கு முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு மொரோக்கோ நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் அங்கே வரலாறு காணாத பனி பெய்த போதும் அதைப் பொருட்படுத்தாமல் மிகுந்த சிரமத்துடன் உக்கிரமான சண்டை காட்சிகளையும், கண்களைக் கவரும் பாடல் காட்சிகளையும் படமாக்கி உள்ளனர்.

துரித வேகத்தில் படப்பிடிப்பை நடத்திய திரு. ரவி கே.சந்திரனின் வேகத்தையும், படமாக்கும் நேர்த்தியையும் கண்டு Bourne ultimatum, The Mummy, Zero dark 30, Body of lies , Kingdom of heaven ஆகிய உலக தரம் வாய்ந்த படங்களில் பணியாற்றிய மொராக்கோ நாட்டு படக் குழுவினர் ஆச்சர்யபபட்டு பாராட்டியுள்ளனர்.

காட்சிக்கு காட்சி நேர்த்தி, பிரம்மாண்டம் என உருவாகி வரும் “யான்” இந்தக் கோடையின் மிகப் பெரிய திரை விருந்தாக அமையும் என்கிறார் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்.