Shadow

புட் சட்னி.!

Put Chutney

கல்ச்சர் மெஷினின் என்பது டிஜிட்டல் வீடியோ பொழுதுபோக்கு நிறுவனம். அவர்களின், என்னடா ராஸ்கல்ஸ் என்ற பாடல், தென்னிந்தியர்களை நையாண்டி (parody) செய்யும் விதமாக எடுக்கப்பட்டுப் பிரபலமானது. அவர்கள் இப்போது தென்னிந்தியாவை மனதில் வைத்துக் கொண்டு, “புட் சட்னி” என்றொரு பிரத்தியேக அலைவரிசையைத் தொடங்கியுள்ளனர். தென்னிந்தியக் கதைகளை நகைச்சுவையுடன் அணுகும் காணொளிகளைத் தயாரிக்கவுள்ளது இந்த ‘புட் சட்னி. “விந்திய மலைகளின் கீழுள்ள இந்தியா வண்ண வண்ணமான அடையாளங்களையும், பொக்கிஷமான திறமைகளையும் பெற்றுள்ளது. அதை வெளிக்காட்டுவதே ‘புட் சட்னி’யின் நோக்கம்” எனச் சொல்கிறார் கல்ச்சர் மெஷினின் நிறுவனாரன சமீர் பிட்டல்வாலா.

ஹாலிவுட்டின் சூப்பர் ஹீரோக்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்தவராக இருந்தால் எப்படியிருக்கும் என்ற கருவின் முதல் கட்டமாக, பேட்மேன் சென்னையில் இருந்தால் எப்படி இருக்குமென, What If Batman was From Chennai என்றொரு காணொளியை வெளியிட்டுள்ளது புட் சட்னி. இதில் டெல்லி கணேஷ், பேட்மேணின் தந்தையாக வந்து, பேட்மேனை செமயாக கலாய்க்கிறார். மேலும் பல நகைச்சுவை வீடியோக்களை புட் சட்னியிடமிருந்து எதிர்பார்க்கலாம்.