Shadow

மனதில் மாயம் செய்தாய்

தொலை தொடர்ப்பு சாதனங்கள் எந்த அளவுக்கு சாதகமானதோ  அந்த அளவுக்கு பாதகமானதும் கூட. இந்த உண்மையை பல செய்திகள் வாயிலாக நாம் படித்தும் கேட்டும் இருப்போம். இந்த மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் படம் தான் “மனதில் மாயம் செய்தாய் (M M S)”.

ஃபுல் ஹவுஸ் என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் சார்பில் ஜெய்சன் புலிகுட்டி மற்றும் வின்ஸ் மன்கடன் தயாரித்து உள்ள இந்த காதல் கலந்த த்ரில்லர் படத்தில் நடித்துள்ளோர் சேது (மைனா புகழ்), பிரின்ஸ், ரிச்சா பானாய், திஷா பாண்டே, மனோபாலா மற்றும் பலர். சேதுவின் நடிப்பும், படத்தின் திரைக்கதை வசனமும் மிகப் பெரிய பலம் என்பது பார்த்தவர்களின் கணிப்பு. இந்தப் படத்தை பற்றிய தயாரிப்பாளர்களின் கருத்து, “இது எங்களது நிறுவனத்தின் முதல் தயாரிப்பு. படத் தயாரிப்பின் நுணுக்கங்களை நாங்கள் புரிந்து கொள்ளவும் அறிந்து கொள்ளவும் எங்களுக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு இது. ‘மனதில் மாயம் செய்தாய்’ படத்தின் இசை அமைப்பாளர் மணி காந்த் கத்ரி அவர்களின் இசைக்கு கிடைத்த வரவேற்பும், இந்தப் படத்தின் முதல் பிரதியைப் பார்த்த திரை உலகினர் கொடுத்த ஆதரவும் எங்களது நிறுவனத்தின் சார்பில் மேலும் தரமான படங்களை தயாரிக்க ஊக்குவிக்கிறது” என்றனர்.

Leave a Reply